கள்ளப்பிறப்பு பற்றி கனிமொழி கிட்ட போய் கேளு! ஆ.ராசாவை கிழித்தெடுத்த வித்யா!

0
94

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனமக்களிடையே வாக்கு சேகரித்த நடிகை விந்தியா முதலமைச்சரின் தாய் குறித்து இழிவாக பேசிய ஆ.ராசாவை வறுத்தெடுத்தார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க்கபட்ட நாளில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எதிர்கட்சியாக திமுகவுக்கு எதிராகவும், ஸ்டாலின் தான் வராரு என்ற பாட்டிற்கு எதிராக ரைமிங் வசனம் பேசி திமுகவை விமர்சித்து விந்தியா பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை ஆதரித்து படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார்.

கோத்தகிரியில் பிரச்சாரம் மேற்கொண்ட விந்தியா 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் திமுக அகோர பசியில் இருப்பதாகவும், பெண்களை இழிவாக பேசுவதே அவர்களின் வேலை என்றும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் தாயார் குறித்து இழிவாக பேசிய ஆ.ராசாவை கடுமையாக கண்டித்த விந்தியா, அதிமுக என்றும் பெண்களுக்கு கண்ணியம் கொடுப்பதாக கூறினார். ஸ்பெட்ரம் வழக்கில் திகார் சிறைக்கு சென்றும் திருந்தாத ஆ.ராசா பெண்களை இழிவாக பேசி மேலும் தவறிழைத்து விட்டதாக சாடினார்.

மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியுறுவதற்கு ஆ.ராவின் ஊழலும், அவரின் பேச்சுமே காரணமாக இருக்கும் என்ற விந்தியா அதிமுகவின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’ராசாவே, கள்ளபிறப்பை பற்றி கனியிடம் கேள். தான்பெற்ற கனிமொழியை தன் மகள் இல்லை என மறுத்தது யார்! போன தேர்தல்ல ராசாவின் கை நீண்டது திமுக தோற்றது இந்த தேர்தல்ல வாய் நீளுது டெப்பாசீட்கூட வாங்காது. முதல்வர்அம்மா, முதல்வரின் அம்மா என தாய்குலத்தை இழிவுபடுத்தும் திமுகவை துரத்திஅடிப்போம்’ என பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

author avatar
CineDesk