ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை! கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு!

0
48

கொரோனா காலத்தில் 5 மாதங்களுக்கு மேல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. அதேபோல் அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது.

சில மாணவர்கள் தங்களது வறுமையின் காரணமாக மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களை வாங்க முடியாது என்பதால் ஆன்லைன் வகுப்புகளில் அவர்களால் கலந்து கொள்ளமுடிவதில்லை.

ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக அதிகமான புகார்கள் பெருகி வரும் நிலையில்,பள்ளி கல்வி ஆணையர் சீகி தாமஸ் வைத்யன், எந்த ஒரு மாணவர்களையும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் பள்ளிகளுக்கு, மாணவர்களின் வருகையை கணக்கிடக் கூடாது என்றும், ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யக்கூடாது என்றும், தெரிவித்துள்ளார்

பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முழு கட்டணத்தை கட்ட வேண்டும் என தனியார் பள்ளிகள், பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya