ஆட்டிசம் பற்றி தெரியுமா? குழந்தை உள்ளவர்கள் கட்டாயம் படிங்க! இப்படி இருந்தால் மருத்துவரை அணுகலாம்!

0
252
#image_title

இன்றைய காலகட்டத்தில் அதிகமான குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடுகளால் பிறக்கின்றனர். மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பாதிக்கு பாதி அளவே தெரிந்து வைத்திருக்கின்றனர் எனவே அதை எவ்வாறு கண்டறிவது, ஆட்டிசம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாடு உடையது. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அவர்கள் பேசுவதிலும் மற்றவருடன் பழகுவதிலும் சிரமமாக உள்ளனர்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் ஒவ்வொரு வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயல்பாக இருக்கிறதா அல்ல அதன் வளர்ச்சியில் மாற்றம் தெரிகின்றதா என்று உற்று நோக்க வேண்டும்.
குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சி நிலை அந்தந்த மாதங்களில் சரியாக உள்ளதா அல்லது ஏதேனும் பின் தங்கி உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
ஆட்டிசம் என்பது ஒருவகை நோய் அல்ல குறைபாடு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்டறிவது எப்படி?
குழந்தைகள் மழலையில் பேசுவதில் சிரமம் இருக்கும். அதனுடைய வளர்ச்சியில் மந்தமாக காணப்படுவது அதாவது இதனை டெவலப்மென்டல் டிலே என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இத்தகைய குழந்தைகள் செய்யும் செயலை திரும்பத் திரும்ப செய்வார்கள்.
கண் பார்த்து பேசுவதில் சிரமமாக இருக்கும்.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.

மீண்டும் மீண்டும் செய்வது, சொன்னதையே திருப்பி சொல்வது, கவனிப்பதில் சிரமம் இத்தகைய செயல்கள் காணப்படும்.
ஆட்டிசம் என்பதை நாம் பிறந்த உடனே கண்டறிய முடியாது 1 முதல் 3 வயதில் கண்டறியலாம்.
இயற்கையாக வளரும் குழந்தைகளுக்கும் இத்தகைய குழந்தைகளுக்கும் அவர்களுடைய வளர்ச்சியில் மாற்றம் தெரியும் .குறைவாக காணப்படும் குறிப்பாக ஒரு ஒரு பொருளை சுட்டி காண்பித்து சொல்வதில், தலையசைப்பதில் குறைவாக இருக்கும். பெயர் சொல்லிக் கூப்பிட்டால் குழந்தைகள் திரும்பாமல் இருக்கும் போன்ற அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு குழந்தை 24 மாதத்தில் நான் சொல்வதை திரும்ப சொல்லாமலோ செய்வதை திரும்ப செய்யாமலோ இருந்தால் நாம் மருத்துவரை அணுகி காண்பிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் காரணிகளால் கூட இத்தகைய குறைபாடுகள் ஏற்படலாம்.
அதாவது கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வருவது, குழந்தை பிறக்கும் போது தாயின் வயது அதிகமாக இருப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு இதெல்லாம் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுவயதிலேயே ஆட்டிசம் குறைபாடு உள்ளதை நாம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை நாம் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பிரச்சனைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முறையான பயிற்சி மேற்கொண்டால் ஓரளவு இதை சரி செய்யலாம்.

author avatar
Kowsalya