Connect with us

Breaking News

வெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!

Published

on

வெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்! 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது.

Advertisement

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை சுவைத்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

நாக்பூர் வெற்றியை தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை வெள்ளிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது.  எனவே அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இரண்டு அணிகளும் நாளை மோதுவது 104வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடைபெற்ற 103 போட்டிகளில் இந்தியா 31 போட்டியும், ஆஸ்திரேலியா 43 போட்டியும், வெற்றி பெற்றுள்ளன. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஒரு டெஸ்ட் போட்டி டையில்  முடிவடைந்தது. இந்திய நேரப்படி நாளை காலை 9:30 மணி அளவில் போட்டியானது தொடங்கி இருக்கிறது. இதற்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement