தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்?

முன்னாள் தமிழக முதல்வர்களான ஜெ.ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதி என மிகப்பெரிய ஆளுமைகள் இருந்த காலத்திலே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக மக்களின் பிரச்சனைகளில் கண்டன அறிக்கைகள்,கள போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற போராட்டம்கள் என சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தவர் என்பதை மாற்று கட்சியினர் கூட ஏற்று கொள்வர்.

இந்நிலையில் பாமகவின் மாநில இளைஞர் அணி தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். பாமக கடந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி கொண்டது.பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியை பறித்தது பாமக வின் வாக்குகளே.

ஏற்கனவே உள்ள கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவும்,புதியதாக ஆரம்பித்த தேமுதிக என அனைத்து கட்சிகளும் முதலில் வன்னியர் வாக்குளை தான் குறி வைப்பார்கள்.அந்த வகையில் தமிழகத்தில் கட்சியை வளர்க்க நினைத்த பிஜேபியின் தேசிய தலைவர்களும் பாமகவின் மீது அதிருப்தியில் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை கொண்டு சத்ரிய சாம்ராஜ்ஜியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சாதிய அடிப்படையில் ஒருங்கிணைத்து வன்னியர் வாக்குகளை கவர நினைத்தனர் ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லாமல் போனதால் அந்த அமைப்பும் காணாமல் போனது.

அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதிய அடிப்படையில் வன்னியர் இன மக்களை கவர பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் தலைமையிலான அரசு வன்னியர் குல சத்ரிய பொதுச்சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2018 இயற்றியதற்கும்,கடலூரில் எஸ்.எஸ் இராமசாமி படையாட்சியார் முழு உருவ வெண்கல சிலையுடன் மணிமண்டபம் கட்டுவதற்கும்,இராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அகில இந்திய வன்னியர் குல சத்ரிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அகில இந்திய வன்னியர் குல சத்ரிய சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ்,என்.ஜி.ஓ சங்க முன்னாள் தலைவர் கோ.சூரிய மூர்த்தி,முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

 

18 மாவட்டங்களில் இருந்து 79 வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சொத்துக்கள் மற்றும் அறக்கட்டளைகள் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,மீதமுள்ள சொத்துக்களை கண்டறிவதுடன் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்களை பாதுகாத்து அவை உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பல வன்னியர் சமுதாய அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கொடையாக வந்த அனைத்து சொத்துக்களையும் பாதுகாத்து வன்னிய மக்களின் மேம்பாட்டிற்காக முறையாக பயன்படுத்தும் தனி சட்ட முன்வடிவை சட்ட பேரவையில் நிறைவேற்றி அதை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம்.குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்து இச்சட்டம் நடைமுறைக்கு வரும் போது இதனை அமல்படுத்த ஏதுவாக ஒரு நிர்வாக குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் இச்சட்டத்தின் மூலம் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும் எனவும்,வன்னியர் குல மக்களின் முன்னேற்றத்தில் அதிமுக தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.அதுமட்டுமில்லாமல் வன்னியர்களுக்காக கட்சி நடத்துவதாக கூறி கொள்பவர்கள் கூட வன்னியர்களின் சொத்துக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இறுதியாக தேசப்பற்று கொண்டு மக்களுக்காக உழைத்த இராமசாமி படையாட்சியாருக்கு பெருமையும்,புகழும் சேர்க்கும் வகையில் தமிழக சட்ட பேரவையில் அவரது முழு உருவப்படம் வைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பொது மக்களின் சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்கள்:

தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்த அதிமுக அப்போதெல்லாம் வன்னிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வந்துவிட்டு தற்போது யாருமே எதிர்பார்க்காத நிலையில் விதவிதமான அறிவிப்புகளை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

வன்னிய மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை அங்கீகரிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்தது அப்போதைய அதிமுக அரசு தானே.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்த மாவட்டமான சேலத்தில் சொந்த கட்சியில் உள்ள வன்னியர் நிர்வாகிகளுக்கே சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்கவில்லை எனும் போது தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு எப்படி பாதுகாப்பாக இருப்பார் போன்ற பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளன.

Anbumani Ramadoss-News4 Tamil
Anbumani Ramadoss-News4 Tamil

முன்னாள் சுகாதார துறை அமைச்சராக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது முதல் தற்போது வரை மாற்று கட்சியினரும் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மது ஒழிப்பு,விவசாயத்திற்கு முக்கியத்துவம்,நீர் மேலாண்மை திட்டம்,காவிரி பாதுகாப்பு,ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு மற்றும் எட்டு வழிச்சாலைக்கான  எதிர்ப்பு போன்ற அனைத்திலும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ் விமர்சித்து வந்த நிலையில் அவரை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவாகவே தமிழக முதல்வரின் திடீர் வன்னியர்களுக்கு ஆதரவான அறிவிப்புகள் காட்டுகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.