சற்றுமுன்: தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணிய தடை.. பின்னணியில் சைலண்டாக வேலை பார்க்கும் திமுக!!

0
209
A while ago: Hijab ban in Tamil Nadu too..DMK working silently in the background!!
A while ago: Hijab ban in Tamil Nadu too..DMK working silently in the background!!

சற்றுமுன்: தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணிய தடை.. பின்னணியில் சைலண்டாக வேலை பார்க்கும் திமுக!!

ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் ஹிஜாப் அணியும் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாக வெடித்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். இந்த தடையை எதிர்த்து பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்துக்கள் மட்டும் கயிறு என தொடங்கி தங்களது மதத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிகலன்களை அணியலாம் நாங்கள் ஏன் அணியக் கூடாது என்று பல கேள்விகள் எழுந்தது.

ஆனால் இதற்குப் பின்னணியில் பாஜக அம் மாநிலத்தில் ஆட்சி பிடித்தது தான் காரணம் என்பது வெளியில் சொல்லப்படாத உண்மை. உயர் நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்கப்பட்டாலும் ஹிஜாப் அணிவது தடை என்ற நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின்வாங்குவதாக இல்லை. அந்த மாநிலத்தைப் போலவே தற்பொழுது தமிழகத்திலும் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தடை விதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். அவ்வாறு அவர் வந்ததற்கு பாஜக மாவட்ட நிர்வாகி புவனேஸ்வர் ராம் என்பவர் ஹிஜாப் அணிந்து பணிக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டும் இன்றி மருத்துவர் அவரின் வேலையை பார்க்கவிடாமல் உடனே ஹிஜாபை கழட்ட வேண்டும் என்றும் மேற்கொண்டு அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் மருத்துவர் பாஜக மாவட்ட நிர்வாகியை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சர்ச்சை அறிந்த மருத்துவமனை சுற்றியிருந்த கட்சியினர் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆண்டு காலமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேற்றுமை இன்றி ஒற்றுமையோடும், மத நல்லிணக்கத்தோடும் மக்கள் பழகி வரும் வேலையில் இவ்வாறு பாஜக மாவட்ட நிர்வாகி நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக் கூறினார். அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு கிடையாது இங்கு அனைவரும் ஒன்றுதான் எனவும் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். பின்பு பாஜக மாவட்ட நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் என்றும் இல்லாத இந்த மத வேறுபாடு விவகாரத்திற்கு பின்னால் திமுக இருக்கக்கூடும் என சந்தேகிக்க தோன்றுகிறது.

ஏனென்றால் வெளியில் பகையாக காட்டிக் கொண்டாலும் சில குறிப்பிட்ட தூண்டுதல் வேலைகளை திமுக சைலன்டாக செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது கூட இவ்வாறான விவகாரம் ஏதும் எழவில்லை. தற்பொழுது இவ்வாறான விவகாரம் தலை தூக்க ஆரம்பித்ததற்கு திமுகவும் ஒருவித காரணமாக இருக்கக்கூடும்.