உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

0
126

 

முடி பிரச்சனை என்பது இப்பொழுது மனவேதனை தரக்கூடியது. ஒவ்வொரு முடியும் வலிமை குறைந்தால் வேரிலிருந்து உதிர ஆரம்பித்து விடும். இப்படி கொத்து கொத்தாக முடி உதிர்வதை தடுக்க முடியின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தான் பார்க்கப்போகிறோம்.

இந்த ஒரு பேக் போட்டு வருவதன் மூலம் பத்து நாட்களில் முடி உதிர்வது நின்று ஒவ்வொரு முடியும் தனித்தனியாக வலிமை பெற ஆரம்பிக்கும். அப்படியான ஒரு இயற்கை ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காரணம் மற்றும் அறிகுறி:

முடி குறைவதற்கு நிறையவே காரணங்கள் இருக்கிறது. அதில் குறிப்பாக ஊட்டச்சத்து குறைவு என்றால் அவ்வளவு தான். . உடலுக்கு வெளியே பராமரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு உள்ளேயும் நாம் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முடி வலிமை பெறுகிறது.
இந்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் உங்கள் முடி மெலிந்து வருவதாக நீங்கள் கண்டறியலாம். இதற்கு முதல் வேலையாக முடியின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே பத்து நாட்களில் முடி உதிர்வது நின்று கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய முடி வலிமை பெற துவங்கும்.
சத்துள்ள உணவு சாப்பிடாமல் இருந்தால் தலைமுடியின் வலிமையும் மெலிந்து கொண்டே போகும். லேசாக பிடித்து இழுத்தாலே முடி சட்டென உடைந்து விடுவதே இதற்கான முதல் அறிகுறி ஆகும்.

செய்முறை:

1. அரை மூடி அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. சிறிய தேங்காய் எடுத்தால் போதும். துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
3. சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் போதும், அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
4. அரைத்து எடுத்ததும் அதை ஒரு மெல்லிய துணியில் இட்டு நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
5. பின்னர் அதே மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தம் செய்த துளசி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
6. துளசி இலைகள் முடியின் வேர்கால்களில் இருக்கக்கூடிய நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி கொண்டுள்ளது.
7. இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தம் செய்த முருங்கை இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
8. இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
9. அரைத்து எடுத்தவற்றை அதே போல துணியில் இட்டு நன்கு வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
10. தேங்காய் பால் மற்றும் இந்த இலைச்சாறுகள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
11. இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள்
12. பின் முடி முழுவதும் வேர்காலில் இருந்து நன்கு இதை தடவிக் கொள்ள வேண்டும்.
13. பிறகு ஒரு கொண்டை போல முடியை நன்கு கட்டிக் கொள்ளுங்கள்.
14. ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது துணி போட்டு தலை முடியை அரை மணி நேரம் மூடி வையுங்கள்.
15. பிறகு நன்கு தலையை அலசிக் கொள்ளுங்கள்.
16. அவ்வளவுதான், இதே போல மூன்று நாட்களுக்கு ஒரு முறை 10 நாள் செய்து வாருங்கள். வலிமை இல்லாத முடி நல்ல வலிமை பெற ஆரம்பிக்கும்.

author avatar
Kowsalya