இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி

0
109
Virat Kohli said we will not make mistakes as the match against England-News4 Tamil Sports News in Tamil
Virat Kohli said we will not make mistakes as the match against England-News4 Tamil Sports News in Tamil

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி

இதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் செய்த தவறுகளை போல மறுபடியும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த போட்டியில் செய்ய மாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நாளை நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டிக்காக 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரரான எம்.எஸ். தோனி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட போகிறது. இதுவரை இந்திய அணி விளையாடிய 100-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஒரு சில போட்டிகளைத் தவிர பெரும்பாலான அனைத்துப் போட்டிகளிலும் தோனி கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் முதல் முறையாக தோனி இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் அந்த நாட்டிற்கு எதிராக விளையாட போகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய அணி டி20, டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதன் தொடக்கமாக முதலில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர்  டி20 தொடரின் முதல் போட்டி நாளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் விராட் கோலி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கடந்த இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஆஸ்திரேலிய பயணத்தின் போது நடைபெறும் இந்த போட்டியில் நடக்காமல் பார்த்து கொள்வோம். கிரிக்கெட்டின் மதிப்பு மிகவும் உயர்வாக இருந்தது. ஆனால் அங்கு நடந்த போட்டியில் எங்களின் தவறுகள் மோசமாக இருந்ததால், நாங்கள் அந்த தொடரை இழக்க வேண்டியதாகிவிட்டது.

சில சமயங்களில் நாங்கள் விளையாடும் போட்டியில் எங்களுக்கு எதிராக விளையாட போகும் எதிர் அணியை சேர்ந்தவர்களுக்கு கடும் போட்டி அளிக்கும் திறமை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் போட்டியில் நாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்து விடுகிறோம். அதேசமயம் குறைந்த அளவிலான தவறுகள் செய்த அணி வெற்றி பெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி-News4 Tamil Best Online Tamil News Portal
Virat Kohli said we will not make mistakes as the match against England-News4 Tamil Best Online Tamil News Portal

ஆனால், தற்போது நடைபெறவுள்ள இந்த ஆஸ்திரேலியத் தொடரில் எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, எங்களின் தவறுகளை சரி செய்து இந்த போட்டியில் வெற்றி பெறுவோம். எங்களின் நோக்கம் இதுவரை நடந்த தவறுகளை சரி செய்து குறைப்பதாகும்.

எங்களுக்கான ஒரு சூழல் மிகவும் மோசமாக சென்றால் அந்தச்சூழலில் இருந்து எவ்வாறு விடுபட்டு மீண்டுவருவது என்பது குறித்து தான் முக்கியமாக அப்போது சிந்திப்போம்.

கடந்த முறை சென்ற இங்கிலாந்து பயணத்தில் நாங்கள் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடினோம், ஆனால், அந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் உறுதியாக அதை மாற்றி காட்டுவோம். கிரிக்கெட்டில் டெஸ்ட் தொடரை ஒவ்வொரு அணியும் வெல்வதற்கான முயற்சியை செய்யும். அந்த வகையில் இந்த பயணத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரையும் வெல்வதற்கான தகுதி எங்களிடம் உள்ளது என்று அந்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்தார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், வர்த்தக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here