ஸ்டாலினுக்கு அருகதை இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டம்!

0
86

ஸ்டாலினுக்கு அருகதை இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டம்!

புதுக்கோட்டையில் நேற்று மாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட காயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் விபத்துகளை குறைக்க அவசர சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடியில் திடங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், சென்னையில் 11 மாதங்களாக திட்டம் செயல்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை உலக அளவில் தரத்திற்கு இணையாக வளர்ந்து வருவதாக தெரிவித்த அவர், சுகாதாரத்துறைக்கு விஜயபாஸ்கர் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், சுகாதாரத்துறை செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்ய ஸ்டாலிக்கு எந்த அருகதையும் இல்லை என்றார். தமிழகத்தில் எது நடந்தாலும் அதனை அரசியலாக்குவதாக விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here