நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங்

0
389
Vijay Fans Criticise and Trends Hashtag Against Seeman-News4 Tamil Online Tamil News Channel
Vijay Fans Criticise and Trends Hashtag Against Seeman-News4 Tamil Online Tamil News Channel

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங்

நடிகர் விஜய்யை விமர்சனம் செய்ததற்காக அவரது ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீப காலமாக அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்களை விமர்சனம் செய்வதும்,அதற்கு அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதற்கெல்லாம் சினிமா நடிகர்கள் அனைவரும் அரசியல் ஆசையுடன் ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளுக்கு போட்டியாக களத்தில் இறங்குவது தான் காரணம்.

நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு நுழைய முற்படும் இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் சர்க்கார் பட விவகாரம் சம்பந்தமாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அவர் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். 

அந்த அரசியல் நிகழ்ச்சியில் சீமான் அவர்கள் பேசியதாவது, சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் என கூறுவது எல்லாம் அவமானம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 

மேலும் மோடியின் அடிமை எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்… உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?… இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம் என்று  விஜய்யை விமர்சனம் செய்திருந்தார். 

https://twitter.com/Official_AAD/status/1081800240103976960

ஒரு வகையில் தமிழக அரசியல் நிலைமை குறித்து சீமான் அவ்வாறு கருத்து தெரிவித்தது சரியாக இருந்தாலும் நடிகரான அவரை குறை கூறும் முன்பு அரசியல்வாதியாக சீமான் சரியாக செயல்பட்டாரா? அவர் பேசும் போது முன்னுக்கு பின் முரணாக பேசுவது சரியா? என்று சீமான் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை எல்லாம் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் ட்விட்டரில் பதிவு செய்த விமர்சனங்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ் டேக்கில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது  
 


மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Vijay Fans Criticise and Trends Hashtag Against Seeman

author avatar
Parthipan K