ட்விட்டரில் #கற்பழிப்புதிமுக வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த திமுகவினர் கற்பழிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க தயாராகும் ஸ்டாலின்
கடந்த காலங்களில் திமுகவினர் அராஜகம் செய்வதும் அதற்காக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மன்னிப்பு கேட்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதுவரை பிரியாணி கடை,டீ கடை,பஜ்ஜி கடை,பியூட்டி பார்லர்,செல்போன் கடை,பேன்சி ஸ்டோர் மற்றும் உச்ச கட்டமாக தன் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியின் இடுப்பை கிள்ளியது என திமுக தலைமையை தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் அசிங்கபடுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது திமுக நிர்வாகியின் மகன் கற்பழிப்பு விவகாரத்தில் சிக்கியுள்ளார். கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையில் திமுக பிரமுகரான காக்கா ரவி என்ற ரவிச்சந்திரன் கோவை தெற்கு மாவட்டத்தின் ஆதி திராவிடர் அமைப்பில் பதவி வகித்து வருகிறார். 12 ஆம் வகுப்பு படித்துவரும் அவரது மகன் அந்த பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கற்பழித்து விட்டதாக புகார் அளித்துள்ளார்கள்.
அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திமுக நிர்வாகியின் மகனான கவின் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். கவின் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த சிறுமிக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் தற்போது, சிறுமியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டி கொண்டு தொடர்ந்து ஆளும் அதிமுக அரசை விமர்சித்து வந்த திமுக தலைமைக்கு சொந்த கட்சிகாரரின் மகனே கற்பழிப்பு விவகாரத்தில் சிக்கியுள்ளது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பெரிய அளவில் போராட்டம் நடத்திய கனிமொழி போன்றவர்கள் இந்த சிறுமிக்கு ஆதரவாகவும் சொந்த கட்சி நிர்வாகிக்கு எதிராகவும் போராடுவார்களா என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
திமுக கட்சிகாரர்களின் கடந்த கால அராஜகத்தையும் தற்போதைய இந்த கற்பழிப்பு விவகாரத்தையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் விமர்சித்து பதிவிட்ட பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக.
இதுவரை #ஓசிபிரியாணிதிமுக #பியூட்டிபார்லர்திமுக #இடுப்புகிள்ளிதிமுக #ஓசிசெல்போன்திமுக #ஓசிபஜ்ஜிதிமுக #ஓசிடீதிமுக #மண்டியிட்டதிமுக என்று ட்விட்டரில் கிண்டலடித்து வந்தவர்கள் தற்போது #கற்பழிப்புதிமுக என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.விரைவில் #கற்பழிப்புதிமுக என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரென்ட் ஆகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.
#Valparai #ValparaiAbuse #ValparaiSexualAbuse #DMK #MKStalin