பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக மற்றும் திமுக போராட்டம் 

0
61
Vaiko Aressted in Protesting for the Release of RajivGandhi SECVPF
Vaiko Aressted in Protesting for the Release of RajivGandhi SECVPF

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக மற்றும் திமுக போராட்டம்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்னே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கடந்த வாரத்தில் தருமபுரியில் மூன்று மாணவிகளை எரித்து கொன்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுகவை சேர்ந்த 3 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

மாணவிகளை உயிருடன் எரித்து கொலை செய்த அதிமுகவினரின் விடுதலைக்கு ஒப்புதல் கொடுத்த தமிழக ஆளுநர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது தமிழக மக்களிடம் அதிர்ப்தியை உண்டாக்கியது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசே முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 20 வருடங்களாக  சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த தீர்மானம் குறித்த எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் 7 பேரை விடுதலை செய்யாத தமிழக ஆளுநரை கண்டித்து மதிமுக சார்பாக கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 3-ம் தேதி நடக்கும் என்று அறிவித்திருந்தனர். மதிமுகவின் இந்த முற்றுகை போராட்டத்திற்கு முக்கிய எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் எதிர்கட்சியான திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்ரமணியம் போன்றோரும், விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள் மேலும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக மற்றும் திமுக போராட்டம்-News4 Tamil Online Tamil News Website
Vaiko-aressted-in-protesting-for-the-release-of-RajivGandhi_SECVPF-News4 Tamil Online Tamil News Website

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய வைகோ, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது மற்றும்  கண்டிக்கத்தக்கது என்றும் உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதற்கு காரணமாக உள்ள மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் வைகோ மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

#MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள்உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள் | காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here