வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்

0
225
VadaChennai Controversial Scenes and Dialogues Removed by VadaChennai Crew-News4 Tamil
VadaChennai Controversial Scenes and Dialogues Removed by VadaChennai Crew-News4 Tamil

வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்

VadaChennai Controversial Scenes and Dialogues Removed by VadaChennai Crew : சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி கடந்த 17 ம் தேதி வெளியான படம் “வடசென்னை”.வடசென்னை பகுதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

VadaChennai Controversial Scenes and Dialogues Removed by VadaChennai Crew
VadaChennai Controversial Scenes and Dialogues Removed by VadaChennai Crew-News4 Tamil

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களையும் ரவுடிகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட  இந்தப் படத்தில், வடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கையை பற்றித் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழும் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் இயக்குநர் வெற்றிமாறன் அதுகுறித்து மன்னிப்பு கேட்டார்.

மன்னிப்பு கேட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள், மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்துவதாகவும், அவர்கள் மனம் புண்படும்படியாகவும் இருக்கிறது என்று சில மீனவ அமைப்புகள் ஆங்காங்கே பதிவிட்டு வருகின்றனர். எங்கள் நோக்கம் எப்போதுமே எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிரான அரசியலோ, சினிமாவோ செய்வதல்ல என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகள் பற்றி:

இந்தப் படத்தில் உள்ள சில காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் அமீர் ,ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சி மீனவ சமூகத்தை மிகவும் இழிவாகச் சித்தரிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியைப் படத்தில் இருந்து நீக்குவதாக  நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதை நீக்குவதற்கான வேலைகள் இன்று தொடங்கியிருக்கின்றன. மேலும் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை பார்த்து, படத்தில் இருந்து நீக்குவதற்கு 7 முதல் 10 வேலை நாட்களாகும். கண்டிப்பாக அதை நீக்கி விடுவோம். மீண்டும் ஒருமுறை நாங்கள் சொல்வது என்னவென்றால், எங்கள் நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவதோ அல்லது குறைத்துக் காட்டி சினிமாவில் லாபமோ, பேரோ, புகழோ சம்பாதிப்பதல்ல என்று கூறியுள்ளார்.

வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள்-News4 Tamil
வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள்-News4 Tamil

வடசென்னை இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் பற்றி:

அதேபோல், ‘வடசென்னை’ இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில்,வடசென்னையில் உள்ள  மீனவ பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளையும் விவாதிப்பதும், அந்த இளைஞர்கள் எப்படி அங்கிருந்து எல்லாத் துறைகளிலும் நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் தனிநபரையோ, சமூகத்தையோ புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘வடசென்னை’ படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த காட்சியான சர்ச்சைக்குரிய ஆபாசமான முதலிரவுக் காட்சியை படக்குழுவினர் நீக்கி விட்டு அதற்குப் பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் ஆபாச வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here