Union Govt Extent GST Tax Exemption for Small Scale Industries-Tamil News -News4 Tamil Online Tamil News Channel
Union Govt Extent GST Tax Exemption for Small Scale Industries-Tamil News -News4 Tamil Online Tamil News Channel

தேர்தலை முன்னிட்டு சிறு குறு வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகை

இன்று அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கலந்தாய்வு கூட்டத்தில் சிறு குறு வணிக நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கின் உச்ச வரம்பை இரண்டு மடங்காக உயர்த்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இந்த  32வது ஜிஎஸ்டி கலந்தாய்வு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உள்பட மற்ற அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த ஜிஎஸ்டி கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அருண் ஜெட்லி கூறியதாவது.சிறு குறு நிறுவனங்கள் தங்களது விற்பனை 20 இலட்சதிற்குள் இருக்கும் வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டாம் என்றிருந்த சலுகை தற்போது 40 இலட்சமாக இரட்டிக்கபட்டுள்ளது. அதனால் இனி 40 லட்சத்திற்குள் விற்பனை செய்யும் சிறு குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கபடுகிறது.

மேலும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களில் இருக்கும் வணிக நிறுவனங்களுக்கு இதற்கு முன்பு 10 லட்சமாக இருந்த ஜிஎஸ்டி உச்ச வரம்பை தற்போது 20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இங்குள்ள நிறுவனங்கள் 20 இலட்சத்திற்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே ஜிஎஸ்டி கட்ட வேண்டும். மேலும் கேரளாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக 1 சதவீதம் வரை செஸ் வரி வசூல் செய்து கொள்ளலாம் என முடிவு செய்யபட்டுள்ளது.

மேலும் தற்போது வரை விற்பனை வணிகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கம்போசிஷன் ஸ்கீம் என்ற சலுகை திட்டம் இதற்கு மேல் சேவை துறையை சேர்ந்த வணிகத்திற்கும் நீட்டிக்கப்படவுள்ளது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு சிறு குறு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் குற்றசாட்டுகள் எழுந்தன.பெரும்பாலான மக்களும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதையடுத்து சிறு குறு வணிகர்களையும், மக்களையும் திருப்திபடுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.