தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது

0
134
Union Cabinet Approval AIIMS Hospital in Madurai

தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது

பல நாட்களாக இழுபறியில் இருந்த தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துமனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு பல மாதங்களாக உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டது.

மருத்துவமனை தொடங்கும் பணியை எப்போது ஆரம்பிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று தமிழகத்தில் மதுரையிலும்,தெலுங்கானாவிலும்அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மதுரையில்ரூ.1258 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Union Cabinet Approval AIIMS Hospital in Madurai-News4 Tamil Online Tamil News Website
Union Cabinet Approval AIIMS Hospital in Madurai-News4 Tamil Online Tamil News Website

மத்திய அமைச்சரவை வழங்கிய இந்த அனுமதிக்கு பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பதிவில்,

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில்,

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் இந்தியாவின் உயரிய AIIMS மருத்துவமனை தந்து , அதனை விரைவில் தொடங்கிட மத்திய அமைச்சரவை மூலம் ஒப்புதல் வழங்கிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பாகவும் ஒட்டு மொத்த தமிழர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளை ஓர் திருவிழாவாக கொண்டாடுவோம் என்று குறிபிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று பல வகைகளிலும் போராடிய பின்னர் முடிவாக தென் தமிழகத்தில் மதுரையில் மருத்துவமனையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக தரமான மருத்துவ வசதிகளை கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது தென் தமிழகத்தில் அமைகிறது.மதுரையில்திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 200 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் நவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை இருப்பதாலும்,அனைத்து தென் தமிழக பகுதிகளிலிருந்து சுலபமாக வந்து செல்ல தேசிய நெடுஞ்சாலை தொடர்பு இருப்பதாலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Union Cabinet Approval AIIMS Hospital in Madurai


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here