Udhayanidhi Stalin Will Break the DMK Alliance-News4 Tamil Online Tamil News Channel
Udhayanidhi Stalin Will Break the DMK Alliance-News4 Tamil Online Tamil News Channel

உதயநிதி ஸ்டாலினால் உடையும் திமுக கூட்டணி விரைவில் வெளியேறவுள்ள புதிய கட்சி

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டது.தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களுக்கான கூட்டணியை பெரும்பாலும் இறுதி செய்து விட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள்,மதிமுக மற்றும் இந்திய ஜனநாயக கட்சி போன்றவைகள் இணைந்துள்ளன. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக,பாஜக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் நீண்ட இழுபறிக்கு பின் தேமுதிகவும் இணைந்துள்ளன.

கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைந்த இந்நிலையில் எந்த கட்சிக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பதில் இரண்டு கூட்டணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு சுமூகமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகின்றன.ஆனால் திமுக கூட்டணியில் விசிக மற்றும் ஐஜேகே போன்ற கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

கடைசி நேரம் வரை பாஜக கூட்டணியில் இணைய காத்திருந்த இந்திய ஜனநாயக கட்சியின் பாரி வேந்தர் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்தார்.அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கள்ளக்குறிச்சி தொகுதியை அந்த கட்சிக்காக பாரி வேந்தர் கேட்டு வருவதாகவும்,ஆனால் திமுக தலைமையோ அவருக்கு அரியலூர் தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினின் தலையீடு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு காரணம் திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்பது தான் என்று கூறப்படுகிறது. தனது மகனுக்கு அந்த தொகுதியை வாங்கி கொடுத்து அந்த பகுதியில் தான் இழந்த செல்வாக்கை மீட்டு விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் பொன்முடி. அதே நேரத்தில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியும் உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை பெற்று தர உதயநிதி ஸ்டாலின் வாக்கு கொடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பாரி வேந்தரின் ஐஜேகே கட்சிக்கு அரியலூர் தொகுதியை ஒதுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் மட்டுமே வாக்குகள் உள்ள ஐஜேகே கட்சி அரியலூர் தொகுதியில் போட்டியிடும் சூழலில் நிச்சயம் தோல்வியடையும் என்பதை உணர்ந்த பாரி வேந்தர் விரைவில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.