எதிர்ப்பையும் மீறி இரண்டு பெண்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம்

0
146
Two Women entered in Sabarimala after the Supreme Court Order-News4 Tamil Online Tamil News Website
Two Women entered in Sabarimala after the Supreme Court Order-News4 Tamil Online Tamil News Website

எதிர்ப்பையும் மீறி இரண்டு பெண்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம்

காலம்காலமாக பின்பற்றி வரும் மரபுகளின் படி பெண் குழந்தைகள் மற்றும் வயதான பெண்களை தவிர மற்ற அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்வதில்லை.ஆனால் சமீபத்தில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சில அமைப்பினர் வழக்கு தொடுத்திருந்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க தீர்ப்பளித்தது.

இந்நிலையில் காலம்காலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை மீறும் வகையில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அங்கு வந்த பெண்களை மலை மீது ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி போராடினார்கள். இந்த சூழ்நிலையை கையாள  சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன்  கோயில் நடை கடந்த 27ம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் மகர பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போராட்ட காரர்களின் எதிர்ப்பையும் மீறி  சபரிமலை ஐயப்பன்  கோவிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளது ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் மாலை அணிந்து இருமுடி கட்டுடன் அதிகாலை 3.45 மணிக்கு 18படிகளில் ஏறாமல் கோவிலின் பின்புறதின் வழியாக குறுக்கு வழியில்  சன்னிதானத்தை அடைந்தனர். இவ்வாறு சபரிமலைக்கு வந்த இரு பெண்களுக்கும் சீருடை அல்லாமல் சாதாரண உடை அணிந்து வந்த காவல்துறையினர்  பாதுகாப்பு அளித்து தரிசனம் செய்ய உதவினர். 

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Two Women entered in Sabarimala after the Supreme Court Order

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here