அமமுகவை விட்டு தினகரன் நீக்கமா? பெங்களூரில் நடந்த சசிகலா மற்றும் தினகரன் சந்திப்பின் பின்னணி என்ன?

0
210
TTV Dinakaran Will Resign from AMMK-News4 Tamil Online Tamil News Website
TTV Dinakaran Will Resign from AMMK-News4 Tamil Online Tamil News Website

அமமுகவை விட்டு தினகரன் நீக்கமா? பெங்களூரில் நடந்த சசிகலா மற்றும் தினகரன் சந்திப்பின் பின்னணி என்ன?

கட்சியில் தன் மீது ஏற்பட்டுள்ள அதிர்ப்தியின் காரணமாக அமமுகவின் துணை பொது செயலாளரான டிடிவி தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அமமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகி செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து தினகரன் தகுதி நீக்கம் செய்யபட்ட MLA க்களுடன் பெங்களூரில் சசிகலாவை சந்தித்தார். சந்திப்பிற்கான தினகரனின் விளக்கம் குறித்து தெரிந்து கொள்ள கீழுள்ள தொடர்பில் செல்லவும்

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சசிகலாதினகரன் சந்திப்பு பற்றி தினகரன் அளித்த விளக்கம்

இந்த சந்திப்பின் பின்புலம் குறித்து தினகரனுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி ஜெயா டீவி தலைமை செயல் அதிகாரி விவேக், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு மகள் ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், நடராஜன் தம்பி பழனிவேல் என சசி குடும்பமே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து புலம்பியுள்ளனர்.

சசிகலா சொல்லிய வேலைகளை தினகரனிடம் சொல்லியும், தினகரன் அதனை தட்டிக்கழித்த தகவலை விவேக்கும், சசிகலாவின் தம்பி  பழனிவேலை சந்தித்து திவாகரன் கொடுத்த திட்டத்தை பற்றி பழனிவேலும் எடுத்துக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கு பிறகு அமமுக தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் தினகரனின் அதிகார மமதை தான் காரணம் என்றும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுக, திமுக வில் ஐக்கியமாக திட்டமிட்டு இருப்பதையும் இளவரசியின் இரண்டு மகள்களும் சசிகலாவிடம் விளக்கமாக கூறியுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக தான் பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவிடமிருந்து தினகரனுக்கு அழைப்பு வந்துள்ளது. முதலில் இந்த அழைப்பை அலட்சியம் செய்யும் வகையில் நாட்களை கடத்தி கொண்டு சென்ற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சென்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டார்.இதனாலே கட்சியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA க்களுடன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளார்.

வழக்கமாக சசிகலாவை சந்திப்பதற்கு தினகரன் தன் மனைவி அனுராதாவையும் உடன் அழைத்துச் செல்வார், ஆனால் இந்த முறை அவரை அழைத்துச் செல்லாமல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அமமுக எம்.எல்.ஏக்களை மட்டுமே அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

சசிகலாவை தினகரன் சந்தித்த போது, சசிகலா தினகரனின் பதவி ஆசையையும், செயல்பாடுகளையும் பற்றி விமர்சித்ததோடு திட்டியும் அனுப்பியிருக்கிறார், இதனுடன் திவாகர் கொடுத்து அனுப்பிய தகவலை  பற்றியும் தினகரனிடம் எடுத்து சொல்லியுள்ளார். 

சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் வழக்கத்திற்கு மாறாக மிக மிக இறுக்கமான முகத்துடன் வெளியே வந்துள்ளார், சசிகலாவுடனான தனது சந்திப்பு பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய தினகரன், அவரையும், அவரது மனைவி அணுராதாவையும் சசிகலா தாறுமாறாகத் திட்டுவதாகவும், இவர் இப்படி திட்டுவார் என்று தனக்கு முன்பே தெரியும் என்பதால் தான் எப்பொழுதும் தன் மனைவியுடன் வந்து சசிகலாவை சந்திக்கும் தினகரன், இந்த முறை மனைவியை அழைத்து வரவில்லை என்று கூறியிருக்கிறார்

இவ்வாறுகட்சியில் தனக்கு எதிராக சசிகலா குடும்பத்தினர் குற்றம் சுமத்துவதோடு இவரைதுணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்சசிகலாவிடம் அவர்களது குடும்பத்தினர் முன் வைத்துள்ளதை அறிந்த தினகரன், அதற்கு முன் தானாகவேராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாகதகவல்கள் வெளியாகிறது. ஒரு வேளை, தினகரன் துணைப்பொதுச்செயலாளர்பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் பட்சத்தில், கட்சியின்தலைமை பொறுப்பிற்கு யாரை நியமிக்கலாம் என்பது பற்றி சசிகலாவின் குடும்பத்தில்ஆலோசனை நடந்து வருகிறதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here