அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சசிகலா தினகரன் சந்திப்பு பற்றி தினகரன் அளித்த விளக்கம்

0
1014
TTV Dinakaran Explain About Sasikala Meet in Bangalore-News4 Tamil Onl;ine Tamil News Website
TTV Dinakaran Explain About Sasikala Meet in Bangalore-News4 Tamil Onl;ine Tamil News Website

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சசிகலா தினகரன் சந்திப்பு பற்றி தினகரன் அளித்த விளக்கம்

பெங்களூரில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சந்தித்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தனர். சுமார் 20 நிமிடம் இவர்கள் சசிகலாவுடன் உரையாடினார்கள்.

இந்த சந்திப்பின் போது தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

முன்னாள் அதிமுக அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான, செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சிறையில் உள்ள சசிகலாவிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தியது என்ற சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.

இந்த நிலையில் இந்த சந்திப்பு ஏன் நிகழ்ந்தது, சசிகலாவை சந்தித்தது ஏன் என்றும் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

ttv dinakaran explain about sasikala meet in bangalore-news4 tamil online tamil news website
ttv dinakaran explain about sasikala meet in bangalore-news4 tamil online tamil news website

பெங்களூரில் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் கூட எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் என்றும், அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பது போல தெரியவில்லை.ஒரு சிலர் அமமுகவை விட்டு சென்றதால் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும் கூறினார்.

மேலும் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிலர் விலகி விடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது. 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால் பார்க்க வந்தோம். எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அதனால் பார்க்க வந்தோம்.

அமமுகவின் வளர்ச்சியையோ,என்னுடைய விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. செந்தில் பாலாஜி நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியேற முடிவெடுத்துவிட்டார். அப்போதே என்னிடம் சிலர் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால் நான் நம்பவில்லை.தற்போது அவர் வெளியேறிவிட்டார்.

தினமும் அமமுகவை விட்டு பலர் வெளியே செல்வதாக செய்திகள் வருகிறது. தினமும் கட்சியிலிருந்து 1000 பேர் சென்றுவிட்டார் , 2000 பேர் சென்றுவிட்டார்கள் என்று கூறுவதெல்லாம் பொய். எங்கள் கட்சியில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் விஷமிகள் இப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

அதிமுகவினர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு எங்களிடம் வந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம். எங்களுடன் வர வேண்டும் என்றால் இப்போதே எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள். இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெற போகிறோம் என்று அதிமுக, திமுக, பாஜக, உளவுத்துறை என எல்லோருக்கும் தெரியும்.அதனால் இப்போதே எங்களிடம் வந்துவிடுங்கள் என்று அதிமுகவினருக்காக டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

ttv dinakaran explain about sasikala meet in bangalore

ttv dinakaran latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here