TTV Dhinakaran Criticise Opinion Polls Support for DMK-News4 Tamil Online Tamil News Channel
TTV Dhinakaran Criticise Opinion Polls Support for DMK-News4 Tamil Online Tamil News Channel

திமுகவிற்கு ஆதரவான கருத்துக்கணிப்புகள் கருத்துத்திணிப்புகள் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சனம்

இரண்டு மாதத்திற்குள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியில் தினகரன் சுற்று பயணம் செய்து வருகிறார்.
இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இரண்டு மாதங்கள் காத்திருங்கள் தமிழகத்தில் உள்ள தற்போதைய ஆட்சி ஒரு முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்றோர் இருந்த வரையில் தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமாக இருந்ததாகவும் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வெளியாகி வரும் திமுகவிற்கு ஆதரவான கருத்துக்கணிப்புகள் பற்றி பேசிய அவர்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் கூறினால், திருவாரூர் இடைத்தேர்தலில்  திமுக போட்டியிட பயந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போது தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்புகள் என்றும், இறுதியில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சூசகமாக குறிப்பிட்யிருக்கிறார். தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் தவறு என்று அப்போது புரியும் என்றும் அவர் கூறினார். தினகரன் இவ்வாறு பேசுவதை வைத்து பார்க்கும் போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரு பலமான கூட்டணியை உருவாக்கும் திட்டத்தில் இருப்பது தெளிவாகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

TTV Dhinakaran Criticise Opinion Polls Support for DMK