கஜா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசிற்கு டிடிவி தினகரன் பாராட்டு  

0
167
TTV Dhinakaran Congratulates Tamilnadu Government's Relief Work in Gaja Cyclone affected Areas
TTV Dhinakaran Congratulates Tamilnadu Government's Relief Work in Gaja Cyclone affected Areas

கஜா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசிற்கு டிடிவி தினகரன் பாராட்டு

எதிர்கட்சியாக இருந்தாலும் கஜா புயலில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை காரணமாக நிறைய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தமிழக அரசை பாராட்டியுள்ளார்.

பல நாட்களாக தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த கஜா புயல் வேதாரண்யத்தில் நேற்று கரையை கடந்தது. இதனால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. மேற்கூறிய மாவட்டங்களில் மின்சாரம், தொலைதொடர்பு ஆகியவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயலினால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்கிற நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அரசு முக்கியமாக வருவாய்த்துறையும் , அதன்கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை துறையும் இணைந்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டது. இதனால் பெரும்பாலும் இழப்புகள் குறைக்கபட்டன.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் மேற்பார்வையில் புயல் தாக்கிய நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை ஒருங்கிணைத்து அமைச்சர்கள் வழிகாட்டுதலுடன் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இவர்களுடன் திமுக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்கட்சியின் தொண்டர்களும் மீட்பு பணியில் உதவினார்கள்.

பொதுமக்கள் அச்சமின்றி இயங்கும் வகையில் ஊடகங்களுக்கு அவ்வப்போது சரியான உறுதிபடுத்தப்பட்ட  விழிப்புணர்வு தகவலை அளித்து பேரிடர் மேலாண்மைத் துறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் பெரிய அளவில் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

இதற்கிடையே தொடர்ந்து அனைவரும் தமிழக அரசை விமர்சித்து வந்த நிலையில் தற்போது கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்ட தமிழக அரசை பொதுமக்களும் மற்றும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பாராட்டி வருகின்றனர்.

தமிழக அரசு நிவாரண பணிகளை மேற்கொண்ட விதத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் நடிகர் கமல் உள்ளிட்ட பெரும்பாலோனோர் பாராட்டிய நிலையில் தற்போது தமிழக அரசையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டிடிவி தினகரனும் பாராட்டியுள்ளார்.

கஜா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசிற்கு டிடிவி தினகரன் பாராட்டு - News4 Tamil Online Tamil News
TTV Dhinakaran Congratulates Tamilnadu Government’s Relief Work in Gaja Cyclone affected Areas

இது குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கஜா புயலை சிறப்பாக கையாளும் விதமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுத்துள்ளார்கள். எதிர்கட்சியாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து புயல் பாதிப்பில் மக்கள் உயிர் பலியை தடுத்துள்ளதை பாராட்ட வேண்டும்.

அதே நேரம் தொடர்ந்து புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்ப முயற்சிக்க வேண்டும். ஏறத்தாழ 90 ஆயிரம்பேர் வரை அங்குள்ள மக்கள் அகதிகள் போல் உள்ளனர். நிறைய மரங்கள் விழுந்துள்ளது. வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்துள்ளது. படகுகள் காணாமல் போயுள்ளது. மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், ஏழை எளியமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வேதாரண்யம், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை ,பட்டுக்கோட்டை, பேராவூரணி, திண்டுக்கல் வரையிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கடலூர்,புதுக்கோட்டை  பகுதிகளில் பெரிய அளவில் பதிப்பு உள்ளது. ஆகவே இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கெடுத்து மத்திய அரசிடம் கூறி பேரிடராக அறிவித்து இழப்பீட்டை பெற வேண்டும்.

இவர்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பவர்கள்தானே. நிதியைப்பெற்று டெல்டா பகுதி மக்களுக்கு, ராமநாதபுரம் மற்ற மாவட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதன் மூலம் அவர்கள் இழந்த வாழ்க்கையை மீட்டு தர முயற்சிக்க வேண்டும்.

புயல் வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிரிகளாக இருந்தாலும் நல்லதை பாராட்ட வேண்டும். ஆனாலும் இத்தோடு விடாமல் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் வாழ்வாதாரத்தை திரும்பபெற, உதவ மத்திய அரசிடமிருந்து உதவியை கேட்டுப்பெற வேண்டும்.

மத்திய அரசுடன் இவர்கள் இணக்கமாகத்தானே இருக்கிறார்கள், பிராஞ்ச் ஆஃபீஸ்தானே இது. நாம அடிமைகள் என்கிறோம், அவர்கள் சுமூகமான உறவு என்கிறார்கள் ஆகவே அந்த சுமூகமான உறவைப்பயன்படுத்தி மக்களுடைய வாழ்வாதாரத்தை மீட்க உதவவேண்டும் என்றும் அந்த பேட்டியில் டிடிவி தினகரன் கூறினார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#TTV #Dhinakaran #Congratulates #Tamilnadu #Government’s #Relief #Work #Gaja #Cyclone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here