விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

0
122
TN Chief Minister Edappadi Palaniswami Announced Kallakurichi as New District from Villupuram-News4 Tamil Online Tamil News Website
TN Chief Minister Edappadi Palaniswami Announced Kallakurichi as New District from Villupuram-News4 Tamil Online Tamil News Website

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

நிர்வாக வசதிக்காக பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள  விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி எனும் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டம் பரப்பளவில் பெரியதாக இருப்பதால் அரசு சேவைகளை பெற சிரமமாக உள்ளது என அந்த மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த பகுதியை சேர்ந்த தமிழக சட்ட பேரவை உறுப்பினர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து பேசிய போது விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது இரண்டாக பிரிக்கப்படுகிறது என்று அறிவித்தார்

இதற்காக கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்றும் அப்போது கூறினார்.இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சியை தலைமையாக கொண்டு தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உருவாகும் புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி,சங்கராபுரம் மற்றும் சின்ன சேலம் போன்ற பகுதிகள் அடங்கும்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

TN Chief Minister Edappadi Palaniswami Announced Kallakurichi as New District from Villupuram

#Kallakurichi #EdappadiPalaniswami 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here