Thiruvarur By Election Cancelled By Election Commission-News4 Tamil Online Tamil News Website
Thiruvarur By Election Cancelled By Election Commission-News4 Tamil Online Tamil News Website

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்த அறிவிப்பை தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை நிறுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், தேர்தல் பணி அதிகாரிகளும் எடுத்த நடவடிக்கைகள் செல்லாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான திருவாரூரில் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி ஜனவரி 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை 31-ஆம் தேதியும் அறிவித்திருந்தார்கள். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே திருவாரூரில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் பார்க்கபட்டது. திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் அவர்களும், அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அவர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். ஆனால் ஆளும் அ.தி.மு.க. இன்னும் தங்கள் கட்சி சார்பாக வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவை நேரில் சந்தித்து திருவாரூர் இடைதேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். கஜ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த மனுவை பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பி வைத்தது. மேலும் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றி ஆலோசனை நடத்தி அறிக்கை வழங்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல்ராஜை கேட்டுக் கொண்டார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கஜ புயல் பாதித்த பகுதிகளில் திருவாரூர் தொகுதியும் அடங்கும் என்பதால் திருவாரூரில் கஜ புயல் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் இங்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த அனைத்து கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து  திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.