ThangaTamilselvan Gives Explanation about Joining in DMK-News4Tamil Online Tamil News Channel
ThangaTamilselvan Gives Explanation about Joining in DMK-News4Tamil Online Tamil News Channel

திமுகவில் இணைவது பற்றி அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அளித்த விளக்கம்

அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் சேரப் போவதாக வெளியான வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது பற்றி மக்களிடம் எடுத்து சென்று அரசியல் செய்வதை விட்டு அடுத்த கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று வியூகம் வகுத்து கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது திமுக தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வி மற்றும் சமீபத்தில் நடந்த RK நகர் இடைதேர்தலில் அடைந்த படு தோல்வி,திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் மறைவு என அனைத்தும் திமுகவிற்கு பாதகமாக இருக்கும் நிலையில் வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார் தற்போதைய திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின்.

இதற்காக அதிமுகவிலிருந்து பிரிந்து தினகரன் அணியின் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்க திமுக தரப்பிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதில் முதலாக இணைந்தவர் செந்தில் பாலாஜி. இவரை அடுத்து அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால் தினகரன் அக்கட்சியிலிருந்து பிரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து அமமுக என்ற தனிக் கட்சியை துவக்கினார். கட்சி ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை அவருக்கு பக்கபலமாக செயல்பட்டு வருபவர்களில் தங்க தமிழ்ச்செல்வனும் ஒருவர். அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் திறம்பட செயல்பட்டு வந்த சூழ்நிலையில் அவர் திமுகவில் இணைவதாக வெளியான தகவல் தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் தற்போது அளித்துள்ள பேட்டியில், “நான் அதிமுக குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன் என்றும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் விசுவாசி என்றும், அதிமுக இரண்டாக பிரிந்த போது சசிகலா தலைமையை ஏற்று துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நான் இருப்பதாக கூறினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லையே? என்றும் கூறினார்.

எங்களுக்கு இது போன்ற அரசியல் நெருக்கடிகள் மற்றும் பாதிப்புகள் வரும் என்று தெரிந்துதான் தற்போது உள்ள தலைமையை பின் தொடர்ந்து வருகிறோம். எனவே இது போன்ற எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு உண்டு. நான் திமுகவில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை” என திட்டவட்டமாக தங்க தமிழ்ச்செல்வன் மறுத்துள்ளார். 

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

ThangaTamilselvan Gives Explanation about Joining in DMK