தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு மனு

0
92
tamilnadu government appeals sc against crackers case new restrictions on diwali festival-News4 Tamil
tamilnadu government appeals sc against crackers case new restrictions on diwali festival-News4 Tamil

தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு மனு

tamilnadu government appeals sc against crackers case new restrictions on diwali festival : தீபாவளி பண்டிகை நாளில் அதிகாலை 4.30 முதல் காலை 6.30 வரை கூடுதலாக 2 மணி நேரம்  பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியா முழுமையும் வரும் நவம்பர் 6 மற்றும் 7 ஆம்  தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

tamilnadu government appeals sc against crackers case new restrictions on diwali festival
tamilnadu government appeals sc against crackers case new restrictions on diwali festival

இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடுத்து இருந்தனர்.

இதில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,ஜல்லிக்கட்டு தடை,சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது போன்ற இந்துக்களின் நம்பிக்கையில் தலையிடும் சர்ச்சைக்குண்டான தீர்ப்புகளை போல தற்போது தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், அதிக ஒலி எழுப்பும் வகையிலான பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படக்கூடாது எனவும் சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

இந்த தீர்ப்பு பொது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையின்போது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டுமென தமிழக மக்களுக்கு ஆதரவாகவும் இந்த தீர்ப்பிற்கு எதிராகவும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Supreme Court of India-Diwali crackers case-News4 Tamil
Supreme Court of India-Diwali crackers case-News4 Tamil

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தீபாவளி பண்டிகை என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தமிழகத்தில் அதிகாலை வேளையில் தொடங்கி காலை நேரங்களிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வடமாநிலங்களில் தான் தீபாவளி பண்டிகை மாலை நேரங்களில் கொண்டாடப் படுகிறது. எனவே தீபாவளி பண்டிகையின்போது தமிழக மக்களின் கலாச்சார ரீதியாக அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை யிலும் கூடுதலாக 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து தமிழகத்தில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை மேலும் 2 மணி நேரத்துக்கு பட்டாசு வெடிக்க அனுமதி கோரியுள்ளோம்’ என்றார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், பசுமை பட்டாசுகள் வெடிப்பது குறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

green crackers,diwali crackers case,diwali crackers 2018,Diwali crackers,ban on crackers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here