Tamilisai Soundararajan Asks Actor Ajith Fans To Work for BJP-News4 Tamil Online Tamil News Channel
Tamilisai Soundararajan Asks Actor Ajith Fans To Work for BJP-News4 Tamil Online Tamil News Channel

நடிகர் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

திருப்பூரில் நடைபெற்ற மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் விழாவில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களுடன் நூற்று கணக்கான நடிகர் அஜித் ரசிகர்களும் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
திருப்பூரில் நடந்த மாற்று கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணைவதற்காக நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித் ரசிகர்களும் பெரும்பாலோனோர் இணைந்தனர். இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் பேசியதாவது
பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் செயலை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மதசார்பின்மை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் பேசாமல் வாய் மூடி உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த ஸ்டாலின் கொல்காத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஏன் அதை முன் மொழியவில்லை என தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பினார். 
இந்த விழாவில் ஹரி அஜித் தலைமையில் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய தமிழிசை சௌந்தராஜன் திரைத்துறையில் அஜித் மிகவும் நேர்மையான நடிகர். அவர் பலருக்கும் நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் இனி மோடியின் திட்டங்களை அவர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும்,அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள். 

Tamilisai Soundararajan Asks Actor Ajith Fans To Work for BJP