Tamil Nadu Govt Warns Employees Against Participation in Two Day Strike-News4 Tamil Online Tamil News Channel
Tamil Nadu Govt Warns Employees Against Participation in Two Day Strike-News4 Tamil Online Tamil News Channel

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தடுக்க தமிழக அரசின் அறிவிப்பு
நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்த ஜனவரி 22 ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும். மருத்துவ விடுப்பை தவிர மற்ற விடுப்பில் உள்ளவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நாளை பணிக்கு வர வேண்டும். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் இதற்கு முன்னரே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்,அரசு ஊழியர்களுக்கு தற்போது உள்ள சம்பள முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.  ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி 21 மாதம் நிலுவையில் உள்ள ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.