Supreme Court Ordered to Kerala Govt to Protect the Womens-News4 Tamil Online Tamil News Website
Supreme Court Ordered to Kerala Govt to Protect the Womens-News4 Tamil Online Tamil News Website

சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்கு செல்வதற்கு காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

காலம்காலமாக கடைபிடித்து வரும் இந்த கட்டுப்பாட்டில் நீதிமன்றம் தலையிட்டதை எதிர்த்து ஐயப்ப பக்தர்களும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெரும்பாலான பெண்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலை செல்ல முயன்ற பெண்களை போராட்டகாரர்கள் தடுத்து வந்தனர்.ஆனால் போராட்டகாரர்களுக்கு தெரியாமல் கேரளாவை சேர்ந்த இரு பெண்கள் சபரிமலையை அடைந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் அவர்களுக்கு பலதரப்பிலிருந்தும் அச்சுறுத்தல் வந்துள்ள நிலையில் அரசு பாதுகாப்பு வழங்கி வந்தது. ஆனால் சமீபத்தில் வீட்டிற்கு சென்ற போது அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களே இதற்காக அந்த பெண்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் பல்வேறு தரப்பினரின் போராட்டத்தையும் மீறி சபரிமலைக்கு சென்ற பெண்களான கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இருவரும் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.இம்மனு மீதான விசாரணையில் சபரிமலைக்கு சென்ற இந்த பெண்களுக்கு போதிய பாதுகாப்பை கேரளா அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களில் 51 பேரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 24 பெண்கள் என்று கேரள அரசு அந்த தகவலில் தெரிவித்துள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Supreme Court Ordered to Kerala Govt to Protect the Womens

#Sabarimala #SupremeCourt