தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0
133
Supreme Court Issued Order to ReOpen the Sterlite Plant-News4 Tamil Online Tamil News Website
Supreme Court Issued Order to ReOpen the Sterlite Plant-News4 Tamil Online Tamil News Website

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடியில் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 நபர்கள் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக குழு அமைக்கப்பட்டது.அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆலையையும் அதன் சுற்று பகுதிகளையும்  ஆய்வு செய்த இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்கலாம் என குறிப்பிட்டிருந்தது. மேலும் இது பற்றிய செய்தியை அறிய கீழுள்ள தொடர்பில் செல்லுங்கள்.

துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களை பலி வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

இது சம்பந்தமாக வேந்தாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருந்த வழக்கை விசாரித்த  தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து அரசின் சார்பாக மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தது.

அறிவித்தபடியே தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு அனுமதி வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு என எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பு குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்றும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here