இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
188
sri lanka supreme court stays suspension of president sirisena's decision to dissolve parliament
sri lanka supreme court stays suspension of president sirisena's decision to dissolve parliament

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அதிரடியாக அறிவித்தது.

விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றிபெற்று அதிபராகப் பதவி ஏற்றார். இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. இலங்கையின் முன்னாள் அதிபரான ராஜபக்சே அரசில் சிறிசேனா அமைச்சராக இருந்து அவரை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்சாவின் இலங்கை மக்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அவருக்கு ஆதரவு பெருகி வருவதை கண்ட சிறிசேனாவுக்கும்,ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

sri lanka supreme court stays suspension of president sirisena's decision to dissolve parliament
sri lanka supreme court stays suspension of president sirisena’s decision to dissolve parliament

இதையடுத்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு, சிறிசேனா அளித்து வந்த ஆதரவைத் திடீரென வாபஸ் பெற்றார். அதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். அதன்பின், ராஜபக்சேயின் இலங்கை மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, அதற்கான பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.இதன் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16 ஆம் தேதிவரை முடக்கி வைப்பததாக அறிவித்தார். இதனால் இலங்கையிலும் உலக அளவிலும் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று ரணில் விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனாவின் முடிவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தார். ஆனால், இதை சமாளிக்கும் விதமாக  திடீரென நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அதிபர் சிறிசேனா கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தமிழ் தேசியக் கூட்டணி மறுத்துவிட்டது. இதனால் இந்தச் சூழ்நிலையை சமாளிக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த 9-ம் தேதி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் முழுமையான பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கலைக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாக முடிவு செய்தனர்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
sri lanka supreme court stays suspension of president sirisena’s decision to dissolve parliament-News4 Tamil Online News

இந்த சூழ்நிலையில், திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணி இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. 50 நபர்களும் கட்சி மாறினார்கள். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எதிர்கட்சிகள் சார்பாக 13 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரியான ரத்னஜீவன் ஹோலேவும் தனியாகத் தாக்கல் செய்திருந்தார்.இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்ட விரோத நடவடிக்கை என அறிவிக்க வேண்டும் என அந்த மனுக்களில் கோரியிருந்தனர்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் எந்த விதமான ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14 ஆம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கு தடை இல்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைத்து மனுக்களையும் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here