டிடிவி தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்

0
160
Senthil Balaji Joined in DMK
Senthil Balaji Joined in DMK

டிடிவி தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்

டி டி வி தினகரன் ஆதரவாளரும்,அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கடந்த சில தினங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் அணியிலிருந்து பிரிந்து மீண்டும் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவினால் செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் அணியில் இணைந்து கொண்டார்.பிறகு டிடிவி தினகரன் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து அமமுக மாநில அமைப்பு செயலாளர்,மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவளர்களான 18 எம்எல்ஏக்களால் தொடரப்பட்ட வழக்கில் தினகரன் அணிக்கு எதிராக தீர்ப்பு வந்தது முதல் இவருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இதையெல்லாம் வைத்து தான் செந்தில் பாலாஜி திமுகவுடன் இணைவதாக வதந்திகள் பரவி வந்தன.ஆரம்பத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி செந்தில் பாலாஜி திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது. கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் நாளான டிச.16-ம் தேதி இணைய உள்ளார் எனவும்  தகவல்கள் வெளியாகியது. இதனுடன் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜியும் இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

மேற்கண்ட தகவல்களையெல்லாம் உறுதி செய்வது போல தினகரனுடன் செந்தில் பாலாஜி பல நாட்களாக பேசவில்லை என்றும் கூறப்பட்டது.கடந்த 10 நாட்களாக செந்தில் பாலாஜியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தினகரன் அணியினரே கூறினர்.தினகரனே அழைத்தாலும் யாரும் போனை எடுப்பதில்லை என்ற குற்றசாட்டும் வெளிவந்தது.

இதையடுத்து தான் தினகரன் செந்தில் பாலாஜியை எதிர்த்து மறைமுகமாக தாக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் சிலர் சுயநலனுக்காக கட்சியை விட்டு விலகுவதும்,மறுபடியும் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியில் இணைவதும் இயல்பானது எனவும்,துரோகிகளும்,விரோதிகளும் அமமுக வின் வளர்ச்சியைத் தடுக்க செயல்பட்டு வருவதாகவும்,போலிகள் விலக போவதால் கட்சியில் யாரும் வருந்த போவதில்லை எனவும் செந்தில் பாலாஜி பற்றி குறிப்பிட்டிருந்தார்.

Senthil Balaji Joined in DMK-News4 Tamil Online Tamil News Website
Senthil Balaji Joined in DMK-News4 Tamil Online Tamil News Website

இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைவதற்காக தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைவதற்கான அக்கட்சியின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு ஸ்டாலினிடம் கொடுத்த செந்தில் பாலாஜி அவருக்கு சால்வை அணிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

தொடக்ககாலத்தில் திமுகவில் இருந்த செந்தில் பாலாஜி, பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த பின்னர், டிடிவி தினகரனுக்கு அணிக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது மீண்டும் திமுகவில் இணைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here