இந்த வாரம் இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் நல்ல முன்னேற்றம்

0
102
இந்த வாரம் இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் நல்ல முன்னேற்றம்
Sensex and Nifty closed with better performance

இந்த வாரம் இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் நல்ல முன்னேற்றம்

இந்த  வாரத்தில் இந்திய பங்குசந்தை ஓரளவு முன்னேற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 251.72 புள்ளிகள் உயர்ந்து 35,412.26 ஆகவும், தேசிய பங்குச் சந்தை 69.45 புள்ளிகள் அல்லது 4.83 சதவீதம் உயர்ந்து நிஃப்டி 10,686.15 ஆகவும்  உள்ளது. நிஃப்டி ஸ்டாக் ட்ரேடில் 31 நிறுவனங்கள் 1.96 சதவீதம் முதல் 4.83 சதவீதம் வரை லாபத்தை ஈட்டியுள்ளன‌. நிஃப்டியில் லாப சதவீதத்தின் படி முதல் 5 நிறுவனங்கள் பார்டி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஈகர் மோட்டார்ஸ், சிபலா, மற்றும் எச்.சி.எல் டெக் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளன.

நிஃப்டி ஃபார்மா 1.24 சதவீதம் அதிகரித்ததால் மருத்துவ துறை சார்ந்த ஃபார்மா பங்குகள் நல்ல லாபம் ஈட்டின. உலோகம் மற்றும்  ரியால்டி ஸ்டாக் பங்குகள் மேல்நோக்கிய டிரெண்டில் தான் உள்ளது.

Sensex and Nifty closed with better performance
Sensex and Nifty closed with better performance

இந்திய நாணயச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ருபாய் 10 காசுகள் உயர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.87 என உள்ளது.
உலக மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் சீனா – அமெரிக்க வர்த்தக உறவினால் சிறப்பான அளவில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது.

வியாழக்கிழமை உள்நாட்டு நிறுவன முதலீடுகள் 165,31 கோடிக்கு பங்குகளை விற்றன. நேற்று பங்குச் சந்தை சென்செக்ஸ் 118.55 புள்ளிகள் அல்லது 0.34 சதவீதத்துடன் முடிவடைந்தது. நிஃப்டி 40.40 புள்ளிகள் உயர்ந்து 10,616.70 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here