நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால் கைது!

0
164
nakkeeran-gopal-arrest-News4 Tamil
nakkeeran-gopal-arrest-News4 Tamil

நிர்மலா தேவி விவகாரம் குறித்து  ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால் கைது!

நக்கீரன் கோபால் கைது : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக அவதூறான வகையில் கட்டுரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு, ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால் கைது!-News4 Tamil
Nakkeeran Gopal-News4 Tamil

ஆளுநர் அலுவலகம் காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நக்கீரன் கோபால் சென்னையிலிருந்து புனேவுக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் எழுதப்பட்ட கட்டுரையில் ஆளுநர் குறித்து அவதூறான கருத்து இருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள நக்கீரன் இதழில் தான், கோபால் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

செப்டம்பர் 25-28 தேதியிட்டு வெளியான நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் குறித்து அட்டைப்படக் கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையில், கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லத் தூண்டியதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டிருந்தது.இந்த கட்டுரை தான் நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் துறை, ஆளுநரை தரக்குறைவான வகையில் கோபால் கட்டுரையில் விமர்சித்துள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் உடனுக்குடன்  தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள்,வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள் அறிய News4 Tamil செய்தி இணைய தளம்,முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டரில் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here