சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது! | Sarkar Movie 2nd Single Track Released Today Evening | Cinema News in Tamil-News4 Tamil

0
289
Oruviral Puratchi-Sarkar-Second-Single
Oruviral Puratchi-Sarkar-Second-Single

ஒரு விரல் புரட்சி- சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்- Sarkar Movie 2nd Single Track

Sarkar-Song-ஒருவிரல் புரட்சி-News4 Tamil.jp
Sarkar-Song-ஒருவிரல் புரட்சி-News4 Tamil.jp

சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது: விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம், `சர்கார்’. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் விஜய் புகைபிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் காட்சி அரசியல் கட்சிகளின் விமர்சனத்திற்கு காரணமாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது அனைவரும் அறிந்ததே.

சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!'ஒரு விரல் புரட்சி' பாடல் இன்று வெளியாகிறது! | Sarkar Movie 2nd Single Track Released Today Evening | Cinema News in Tamil-News4 Tamil
SIMTAANGARAN-Sarkar-First-Single

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் இந்த படத்தின் சிம்டாங்காரன் (SIMTAANGARAN) பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல நேற்று, விஜயின் நியூ லுக் வெளியிடபட்டது. இணைய ரசிகர்களிடையே வரவேற்பையும், வெறுப்பையும் நிகர் அளவில் பெற்ற இப்பாடலின் தாக்கம் முடிவதற்கு முன்னதாக தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் “ஒரு விரல் புரட்சி” என்னும் பாடலினை இன்று மாலை 6 மணியளவில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Oruviral Puratchi-News4 Tamil
Oruviral Puratchi-News4 Tamil

அண்மையில் வெளியிட்ட சிம்டாங்காரன் பாடலை கேட்டவர்கள் அர்த்தமே புரியவில்லை என்று கூறி கலாய்த்தனர். அர்த்தம் சொன்ன பாடலாசிரியர் விவேக்கையும் கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் “ஒரு விரல் புரட்சி” என்கிற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாடலின் தலைப்பு சுத்த தமிழில் உள்ளது. தலைப்பு புரிந்தது போன்றே பாடல் வரிகளும் புரியும் என்று நம்பப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் விஜய் அரசியலில் பெரும் மாற்றம் செய்வது போன்று கதை அமைத்துள்ளார் முருகதாஸ். இந்நிலையில் ஒரு விரல் புரட்சி பாடல் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஒருவிரல் புரட்சி என்ற பாடல் மூலம் வாக்குரிமை குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படத்தும் வகையில், இந்த பாடல் அமையும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here