Sasikala Plans for TTV Dinakaran to Get Victory in Thiruvarur By Election-News4 Tamil Online Tamil News Website
Sasikala Plans for TTV Dinakaran to Get Victory in Thiruvarur By Election-News4 Tamil Online Tamil News Website

திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற டிடிவி தினகரனுக்காக திட்டமிடும் சசிகலா

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் சொந்த தொகுதி திருவாரூரில் ஜனவரி 28-ம் தேதி இடைதேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானதையடுத்து பல்வேறு கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் மற்றும் சொந்த தொகுதி என்பதால் நடைபெறும் திருவாரூர் இடைதேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னுடைய செல்வாக்கை கட்சியிலும் தமிழக அரசியலிலும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில் தலைவரின் தொகுதியில் வேறு ஒருவரை நிறுத்துவதை விட ஸ்டாலினை நிற்க சொல்லி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளார்கள்.ஆனால் திருவாரூர் இடைதேர்தலில் தான் நின்று வெற்றி பெறுவதை விட தான் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது தான் கட்சிக்கும் தனக்கும் மரியாதையை கொடுக்கும் என கட்சி மூத்த உறுப்பினர்களின் கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்து விட்டார் என்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை எதிர்த்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றதை போல திமுகவின் சொந்த தொகுதியும் திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊராகிய திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபிக்க முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள். திருவாரூர் இடைதேர்தலில் வெற்றி பெற்றாலோ அல்லது இரண்டாம் இடத்தை பெற்றாலோ தமிழக அரசியலில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை பாஜக உட்பட தனது எதிரிகளுக்கு உணர்த்தலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.   

இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுக சார்பாக தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது இந்த தொகுதியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள். ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் காலத்திலேயே அதிமுகவால் வெல்ல முடியாத இந்த திருவாரூர் தொகுதியை தன்னுடைய காலத்தில் எப்படியாவது வெற்றி பெற்று அவர்களால் செய்ய முடியாததை எடப்பாடி பழனிசாமி செய்து முடித்தார் என்ற பெருமையை பெற முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.

எனவே இந்த திருவாரூர் இடைத்தேர்தல் என்பது திமுக, அமமுக, அதிமுக மூன்று கட்சிகளுக்குமே தலை எழுத்தையும்,அரசியல் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க போவதால் நாடாளுமன்ற தேர்தலுக்குரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பில் திருவாரூர் இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம்? இடைத்தேர்தலுக்காக எப்படி வேலை செய்யலாம் என்பது பற்றியெல்லாம் சசிகலாவிடம் தினகரன் ஆலோசனை கேட்கவிருப்பதாக கூறப்படுகிறது.  

திருவாரூர் தொகுதி மக்களின் மனநிலை சசிகலாவுக்கும் தெரியும் என்பதால் டிடிவி தினகரனுக்கு சசிகலா கொடுக்கும் ஆலோசனைகள் தேர்தலில் வெற்றி பெற பயனுள்ளதாக அமையும் என்கின்றனர் அமமுகவினர். இதுமட்டுமில்லாமல் திவாகரன் மற்றும் தினகரனை இணைக்கவும் சசிகலா முயற்சி மேற்கொள்வதாகவும் கூறுகிறார்கள். சசிகலா கொடுக்கும் ஆலோசனைகள் மற்றும் தேர்தல் திட்டங்களின் படி செயல்பட்டு திருவாரூர் தொகுதியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள் அமமுகவினர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Sasikala Plans for TTV Dinakaran to Get Victory in Thiruvarur By Election