ரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை

0
63
Repo rate and ReverseRepoRate unchanged in RBI Monetary Policy December 2018
Repo rate and ReverseRepoRate unchanged in RBI Monetary Policy December 2018

ரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை

இன்று நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் எந்த மாற்றமும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே தற்போது உள்ள  ரெப்போ விகிதம் 6.50 சதவீதமே நீடிக்கும்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக நிதிக்கொள்கை கூட்டம் நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை பற்றிய முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. இந்த மாற்றத்தின் படி  ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது. அதன்பின்னர் கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நிதிக்கொள்கை குழு கூட்டம் மீண்டும் கூடியது. இன்று நடந்த இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் போன்றவை குறித்து விரிவாக ஆலோசனை செய்தார்கள்.

இன்று பிற்பகல் இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே தற்போது உள்ளது போலவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும். இதன்மூலம் இரண்டு முறை அடுத்தடுத்து நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கூட்டத்தில் 2019ம் நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7,4 ஆகவும், 2019-20ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.5 ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் பணவீக்கம் 2.7-3.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும் இந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் அறிவித்துள்ளர்கள்.

ரெப்போ ரேட்

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ ரேட்  (Repo Rate) ஆகும். நீண்ட காலக் கடன்களுக்கு ரிசர்வு வங்கி விதிக்கும் வட்டி  பேங்க் ரேட் (Bank Rate) ஆகும்.

ரிவர்ஸ் ரெப்போ ரேட்

வங்கிகள் தங்களிடமுள்ள அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட காலத்திற்கு வைப்புத் தொகையாக வைத்திருக்கும். இவ்வாறு வைத்திருக்கும் இந்த வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதமே ரிவர்ஸ் ரெப்போ ரேட் (Reverse Repo Rate) ஆகும்.

நாட்டின் பணவீக்கம் (Inflation) மற்றும் பணபுழக்கத்தை கட்டுபடுதுவதற்காகவும், பண மதிப்பை சமநிலை படுத்துவதற்காகவும் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதங்களை கூட்டியும் குறைத்தும் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate #ReverseRepoRate

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here