கருத்துக்கணிப்பில் தொடர்ந்து திமுக முன்னிலை வகிக்க உண்மையான காரணம்

0
660

கருத்துக்கணிப்பில் தொடர்ந்து திமுக முன்னிலை வகிக்க உண்மையான காரணம்

கடந்த சில தினங்களாக தேசிய ஊடகங்கள் நடத்திய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து திமுக முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதற்கு உண்மையான காரணம் திமுகவின் வளர்ச்சியா அல்லது தமிழகத்தில் உள்ள மற்ற முக்கிய கட்சிகள் ஒன்றிணையாமல் சிதறி இருப்பதால் வந்த பலமா என அனைவருக்குமே சந்தேகமே.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக வின் தலைவர் கருணாநிதி என இருவரின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் முன்பு எப்போதும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு உருவாகியது. இந்த எதிர்பார்ப்பு தான் நடிகர்களான ரஜினி மற்றும் கமலஹாசன் போன்றோர்களை துணிச்சலாக அரசியலில் ஈடுபட தூண்டியுள்ளது.

அதே நேரத்தில் முக்கிய தலைவர்களின் மறைவால் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுமே தடுமாறி கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த நடிகர் கமலஹாசன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த தினகரன் போன்றோர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

நடிகராக இருந்தாலும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியை போல கமலஹாசன் தனது கட்சிக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறார்.அவ்வப்போது மக்கள் பிரச்சனைகள் பற்றி அறிய மக்களையும் சந்தித்து வருகிறார். அடுத்து பாமகவின் அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியது முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களின் நலனுக்கெதிரான முக்கிய பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள்,தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் என படித்தவர்களுடன் கலந்துரையாடல் செய்வதன்மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இவர்களை போலவே தினகரனும் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரை தன் பக்கம் இழுத்து கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகிறார்.

ஆனால் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சியான திமுகவோ கட்சியை வளர்க்கவோ அல்லது மக்கள் பிரச்சனையிலோ கவனம் செலுத்தாமல் அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனையால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளது. RK நகரில் நடந்த இடைதேர்தலில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து படுதோல்வியை அடைந்தது. அதன் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் கூட தேர்தலை சந்திக்க தயங்கி கொண்டு தான் வேட்பாளரை அறிவித்தது.திமுக மட்டுமில்லாமல் அதிமுகவுமே இந்த சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மற்றும் தேசிய கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைத்ததால் திமுகவிற்கு இந்த ஆதரவு உருவாகவில்லை.மாறாக தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் மற்றும் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளே திமுக கருத்துக்கணிப்பில் முன்னிலை வகிக்க காரணம்.

தற்போதைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பாமக,அமமுக மற்றும் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகள் தான் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Reason for DMK Rise in Opinion Polls

author avatar
Parthipan K