திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கு யார் காரணம் தெரியுமா? வெளியான புதிய தகவல்!

0
88

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கு யார் காரணம் தெரியுமா? வெளியான புதிய தகவல்!

கலைஞர் கருணாநிதி மறைவை காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டது. ஆனால், அதிமுக மட்டும் வேட்பாளர் அறிவிப்பை தள்ளி போட்டது. இதற்கிடையில் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்றது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தது சமூக வளைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதை மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் உறுதி செய்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் திருவாரூரில் அனைத்து கட்சியினரும் நிவாரணம் வழங்கிய பிறகு இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், அதுமட்டும் காரணம் அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில் திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தல் போன்று இடைத்தேர்தலையும் நடத்த விருப்பம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here