இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

0
201
Prime Minister Narendra Modi to unveils Iron Man Sardar Vallabhbhai Patel Statue of Unity on Today in Gujarat-News4 Tamil

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சிலையான சா்தாா் வல்லபாய் படேல் சிலையை பிரதமா்  நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தற்போதைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு சர்தார் வல்லபாய் படேலே காரணம் என்று புகழாரம் சூட்டினார்.

Prime Minister Narendra Modi to unveils Iron Man Sardar Vallabhbhai Patel Statue of Unity on Today in Gujarat
Prime Minister Narendra Modi to unveils Iron Man Sardar Vallabhbhai Patel Statue of Unity on Today in Gujarat

வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31ம் தேதி) சிலை நாட்டிற்காக அா்ப்பணிக்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு இந்திய விமானப்படையின் கண்கவா் சாகச நிகழ்ச்சிகள், கலாசாரம் தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிலையின் சிறப்பு

இந்தியாவின் இரும்பு மனிதரான சா்தாா் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. 33 மாதங்களாக வடிவமைக்கப்பட்ட இச்சிலை தான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விடவும் உயரமானது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் அப்போதைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் பிரிந்து கிடந்த சிறு சிறு பிராந்தியங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் மிக முக்கியமானவராக திகழ்கிறாா். அவரது பணியை போற்றும் வகையில் இச்சிலைக்கு “ஒற்றுமையின் சிலை” (Statue of Unity) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிலை உருவாக்கம்

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, சர்தார் வல்லபாய் படேல் புகழை சிறப்பிக்கும் வகையில் 2013-ம் ஆண்டு இந்த சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

Prime Minister Narendra Modi to unveils Iron Man Sardar Vallabhbhai Patel Statue of Unity on Today in Gujarat
Prime Minister Narendra Modi to unveils Iron Man Sardar Vallabhbhai Patel Statue of Unity on Today in Gujarat

இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைப்பதில் விவசாயிகள் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் கிராமங்களில் இருந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் இரும்புக் கருவிகளை விவசாயிகளிடம் இருந்து பெற்று அவை உருக்கப்பட்டு சிலையை வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட இரும்பை பயன்படுத்தி பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர் இந்த சிலையை உருவாக்கியுள்ளார். லார்சன் மற்றும் டொப்ரோ கட்டுமான நிறுவனமும் இதில் முக்கிய பணிகளை செய்துள்ளது. சிலையை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை முழுவதுமாக உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது.

விமர்சனம்

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த சிலை முழுமையும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது இல்லை. உள்பகுதி மட்டுமே இந்தியாவில் தயாரானது. வெளிப்பகுதி 553 வெண்கல தகடுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 10-15 நேனோ பேனல்கள் உள்ளது. இது மக்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆனால் இதை உருவாக்கும் தொழில்நுட்ப வசதி இந்தியாவில் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அருங்காட்சியகம்

இந்த சிறப்பு மிக்க சிலைக்கு உள்ளே கீழ் புறத்தில் இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் பெரிய அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இந்த அருங்காட்சியத்தில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பல்வேறு பொருட்களும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here