Prime Minister Modi will Inaugurate AIIMS Hospital in Madurai-News4 Tamil Online Tamil News Channel
Prime Minister Modi will Inaugurate AIIMS Hospital in Madurai-News4 Tamil Online Tamil News Channel

மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை

மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடக்கி வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

தமிழகத்தை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பல நாட்களாக கிடப்பில் இருந்தது. இவ்வாறு பல வருடங்களாக கிடப்பில்  தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தற்போது மதுரை உள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் அமைக்கபடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து மருத்துவமனையை தொடங்குவதற்கான பணிகள் துரிதபடுத்தபட்டன. பிரதமராக பதவியேற்றதிலிருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமோ சலுகையோ வழங்கவில்லை என மக்களும் அரசியல்வாதிகளும் விமர்சனம் செய்து வந்த சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியை விரைவாக ஆரம்பித்து வைத்து அதன் மூலமாக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக மக்களிடம் ஆதரவு பெற நினைக்கிறது பாஜக.

இந்நிலையில் தான் தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதற்காக, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து  தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைவார் என்று தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து பிரதமர் மோடி, 11.30 மணிக்கு மதுரையில் உள்ள மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.