சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்

0
326
police lathi charge on fans crowd keerthy suresh function
police lathi charge on fans crowd keerthy suresh function-News4 Tamil

சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்

சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்-தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷை காண அவரது ரசிகர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் போலிசார் லேசான தடியடி நடத்தினர்.

நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த படம் “சர்க்கார்” தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.அதேபோல நடிகர் விஷாலுடன் இவர் இணைந்து நடித்த சண்டகோழி-2 படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இது போல பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கான மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தையே தனது கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தனியார் நிறுவன நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வந்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷை காண திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்
சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்-News4 Tamil

நகைக்கடை திறப்பு விழாவை முடித்து கொண்டு கிளம்பிய அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தவாறு  ஒரு சில வார்த்தைகளோடு புறப்பட தயாரானார்.அப்போது  நடிகையைக் காணவும், அவரோடு செல்ஃபி எடுக்கவும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நெருங்கியதால், கீர்த்தி சுரேஷின் கார் உள்ளே வர முடியவில்லை. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிப் போன போலீஸார், ரசிகர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

எனினும் போலீஸாரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை அப்புறபடுத்த, காவல்துறையினர் தடியடி நடத்தினர். போலிசாரின் தடியடியால் ரசிகர்கள் தெறித்து ஓடியதால், திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பொது மக்களுக்கு பெரும் இடையுறாக அமைந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here