PMK Volunteers Criticise Tamil Actress Kasthuri-News4Tamil Online Tamil News Live Today2
PMK Volunteers Criticise Tamil Actress Kasthuri-News4Tamil Online Tamil News Live Today2

பரபரப்பிற்காக பாமகவை வம்பிழுத்த நடிகை கஸ்துரியை விரட்டியடித்த பாமகவினர்

தமிழகத்தில் இருந்த பெரும் தலைவர்கள் மறைந்ததையடுத்து தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக அரசியல் பேச ஆரம்பித்து வருகிறார்கள்.அந்த வகையில் சமீபக காலமாக நடிகை கஸ்தூரி சமூக ஆர்வலர் என்ற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து வருகிறார்.மேலும் சமூக ஊடகங்களிலும் தன்னுடைய அரசியல் மற்றும் சமூக நலன் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் அரசியல் பற்றிய கருத்துக்களை தெரிவிப்பது சிறந்தது தான் என்றாலும் சில சமயங்களில் அதுவே பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விடுகிறது.இவ்வாறு தற்கால அரசியல் குறித்து எதேச்சையாக அவர் பதிவிடும் கருத்து ஒரு குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை நேரிடையாக தாக்குவது போல அமைவதால் பதிலுக்கு அந்த கட்சியை சேர்ந்த தொண்டர்களும் இவரை எதிர்த்து விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது விரைவில் மக்களவை தேர்தல் வருவதையடுத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான கூட்டணிகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையில் கூட்டணி உறுதியான நிலையில் மத்தியில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவும் தமிழக ஆளும் கட்சியான அதிமுகவும் கூட்டணி குறித்து முடிவு செய்யாமல் இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது. பாமக கடந்த காலங்களில் கூட்டணி இல்லை என்று அறிவித்தது ஆனால் திடீர் திருப்பமாக தற்கால அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்து அதற்கான முடிவை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எடுப்பார் என கட்சி நிர்வாகிகளால் தீர்மானிக்கபட்டது.

இந்நிலையில் தேர்தல் அறிவித்த பிறகு தான் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என பல முறை கட்சி தலைமை அறிவித்தும்,செய்தியாளர்கள் தொடர்ந்து கூட்டணி குறித்தே கேள்வி கேட்டதால் அது குறித்து பேசி வருகிறோம் என தலைமை அறிவித்தது. இதை மையமாக வைத்து ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த செய்திகளின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி பாமகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விமர்சித்து கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட பாமகவினர் நடிகை கஸ்தூரியை விமர்சித்து ட்விட்டரில் பதிலளித்து வருகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு முறையும் வம்பிழுத்து வகையாக மாட்டி கொள்வதே நடிகை கஸ்தூரிக்கு வழக்கமாகிவிட்டது.

பாமகவினர் நடிகை கஸ்தூரியை விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கள்

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.