PMK Criticise DMK Activity in FC Recervation Issues-News4 Tamil Online Tamil News Website
PMK Criticise DMK Activity in FC Recervation Issues-News4 Tamil Online Tamil News Website

பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவின் சூழ்ச்சியை முறியடித்த பாமக  

மத்திய அரசு கொண்டு வந்த முன்னேறிய வகுப்பினரில் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்த திமுகவின் சூழ்ச்சியை பாமக வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சமீபத்தில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதரத்தில் பின் தங்கிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பெரும்பான்மையான தேசிய கட்சிகள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.குறிப்பாக மம்தா பானர்ஜி,அகிலேஷ் யாதவ் மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த சட்டத்தை வரவேற்று வாக்களித்துள்ளன.

ஆனால் பெரும்பாலான தமிழக கட்சிகள் இந்த சட்டம் சமூக நீதியை அழிக்க நினைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர். திமுக ஆதரவு கட்சி தலைவரான திருமாவளவன் பாமக ஏன் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.மேலும் இந்த விவகாரத்தில் பாமக பாஜகவிற்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவும் இதன் மூலம் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.இவரை அடுத்து அவர் கட்சியை சேர்ந்த வன்னியரசு என்பவரும் இந்த விவகாரம் குறித்து பாமகவை விமர்சனம் செய்திருந்தார்.

இதனையடுத்து திமுக ஆதரவு பத்திரிக்கையும் இந்த விவகாரத்தில் பாமகவை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தது.இதனையடுத்து இந்த விவகாரங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பாமக வின் மாநில தலைவர் GK மணி இது குறித்து பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ள நிலையில், சமூகநீதியில் பார்வைக் குறைபாடு கொண்ட கட்சிகள் தான் அதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கின்றன என்றும், எந்தப் பிரச்சினையிலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடுபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்ற உண்மையையும், சமூக நீதி எங்கள் உயிர் என்று பாட்டாளி மக்கள் கட்சி மூச்சுக்கு முந்நூறு சொல்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொண்ட முரசொலி நாளிதழுக்கு நன்றி. அதேநேரத்தில் திமுக தலைமை மற்றும் முரசொலி நாளிதழின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் வருகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனவரி 7 ஆம் தேதி இது பற்றிய விவரம் ஓரளவு வெளியான போதே மாலை 4.00 மணி அளவில் மத்திய அமைச்சரவையின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். ‘‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு: சமூக நிலையே சரியான அளவீடு!’’ என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் முடிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிராக அமைந்துள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் இந்த ஒதுக்கீடு நிலைக்காது என்பதையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடந்த கால உதாரணங்களுடன் விளக்கியிருந்தார்.

PMK Criticise DMK Activity in FC Reservation Issues-News4 Tamil Online Tamil News Channel
PMK Criticise DMK Activity in FC Reservation Issues-News4 Tamil Online Tamil News Channel

இதைபோலவே மத்திய அரசின் முடிவைக் கண்டித்து மருத்துவர் அய்யா அவர்கள் இரு டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார். ‘‘பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று ஒரு டுவிட்டர் பதிவிலும், மற்றொரு டுவிட்டர் பதிவில்,‘‘உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றும் மருத்துவர் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 10 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஓர் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை இதைவிட சிறப்பாக யாரும் தெளிவுபடுத்த முடியாது.

உண்மையில் 10% இட ஒதுக்கீடு குறித்த மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியான ஜனவரி 7-ஆம் தேதி மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி ஆகிய இருவரைத் தவிர வேறு எவரும் கருத்து தெரிவிக்க வில்லை. சமூகநீதிக்காக பொங்கும் முரசொலி இதழை நடத்தும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு அடுத்த நாள் 8-ஆம் தேதி தான் சட்டப்பேரவையில் இது குறித்து பேசினார். 7-ஆம் தேதி இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இதற்காக திமுக வேண்டுமானால் இதில் இரட்டைவேடம் போடுவதாகக் கூறலாம்.

10% இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏன் வாக்களிக்கவில்லை என்று வினா எழுப்பப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு முடிவை அவசரம், அவசரமாக அறிவித்த மத்திய அரசு, அதே வேகத்தில் மக்களவையில் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைக்கப் பட்டிருந்ததாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் 3 மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்ததாலும் அவரால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதைத் தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது

அதேநேரத்தில் திமுக தலைமை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வாக்களித்தன. சமூகநீதிக்கு எதிராக இந்தக் கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா? என்பதை திமுக தலைமை அறிவிக்க வேண்டும் என்றும்

GK மணி அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தங்களுடைய கூட்டணி கட்சிகள் செய்த துரோகத்தை பற்றி கேள்வி கேட்காமல் பாமக ஏன் இதை பற்றி பேசவில்லை என்று கேட்பது தங்களுடைய கூட்டணி கட்சிகள் செய்த தவறை திசை திருப்பவே என்பதும்,சம்பந்தமில்லாமல் பாமக வையும் விசிகவையும் விவாதிக்க விட்டு அரசியல் ஆதாயம் தேடவே என்பதும் தெளிவாகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள். 

PMK Criticise DMK Activity in FC Reservation Issues