மணல் திருட்டை எதிர்த்து கரூர் பாமக வினர் அதிரடி போராட்டம்

தொடர்ந்து நொய்யல், காவிரி ஆற்றுப்படுகைகளில் மணல் திருடுவது  தொடர்ந்தால், நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டுவோம்” என்று பாமக-வினர் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் புகார் மனு கொடுத்து விட்டு தெரிவித்தனர்.

Pmk against sand smuggling in Karur
Pmk against sand smuggling in Karur

கரூர் வழியாக பாயும் காவிரி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளில் தொடர்ச்சியாக மணல் திருட்டு நடக்கிறது’ என்று விவசாயிகள் நெடுங்காலமாக குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில்தான், விவசாயிகளுக்கு ஆதரவாக மணல் திருட்டைத் தடுக்க வலியுறுத்தி பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் கட்சியினரோடு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் புகார் மனு கொடுத்து விட்டு திரும்பியுள்ளார்.

Baskaran PMK Karur-News4 Tamil
Baskaran PMK Karur-News4 Tamil

மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்த பின்னர் பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் நொய்யல் முதல் திருமுக்கூடலூர் வரை உள்ள காவிரி ஆற்றில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. ஆற்றின் தன்மையைப் பாதிக்கும் வகையில் பணம் ஒன்றையே பிரதானமாக வைத்து இத்தகைய மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சட்டவிரோத மணல் கடத்தல் பற்றி இருமுறை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்தோம். அதன்பிறகு, ஓரளவு மணல் கடத்துவது குறைந்தது. ஆனால், மணல் கடத்தலை முற்றிலும் தடுக்கவில்லை.

மாட்டு வண்டிகளில் உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்காக மணல் அள்ள அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் விரும்பினால், பொதுப்பணித்துறை மூலம் முறையாகவும், நியாயமாகவும் சட்டத்துக்குட்பட்டு நடத்துவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கமாட்டோம். ஆனால், காவிரிப் படுகையில் லாரிகள் மூலம் சென்று மணல் அள்ள எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் எனவும்,பொதுவான தடங்களில் கண்காணிப்பு இல்லாத காரணத்தினாலும், சிலரின் தூண்டுதலின் பேரிலும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது எனவும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஒப்படைக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே மணல் கடத்தப்படுவது முழுவதும் தடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் உடனே மணல் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதையும் மீறி தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்றால், உயர் நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டுவோம்” என்றார் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here