பாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்

0
82
Face-Detection
Face-Detection

பாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்

ஆன்லைன் பண பரிவர்த்தனை இணையதள வசதியை செய்து வரும் பேடிஎம் நிறுவனம் உயர்தர பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு பேஸ் லாக்(Face Lock) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

Paytm Face Lock
Paytm Face Lock

தற்போது அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சி சோதனை வடிவில் உள்ளது.

இதுகுறித்துக் கூறியுள்ள பேடிஎம் மூத்த துணைத் தலைவர் தீபக் அபாட், ”புதிய வசதி மூலம் பயனர்கள் தங்களின் போனைப் பார்த்தால் போதும். தளத்துக்குள் நுழைய முடியும். இதன் மூலம் சைபர் தாக்குதல்களைத் தவிர்த்து, உயரிய பாதுகாப்பைப் பெற முடியும்.

இந்த வசதியை விரிவுபடுத்தும் பணியில் எங்களின் குழு இயங்கி வருகிறது. ஃபேஸ் லாக்-இன் மூலம் எளிதாக, விரைவில் பேடிஎம் தளத்துக்குள் நுழைய முடியும். இதன் மூலம் பயனர்களின் தகவல்களைத் திருடும் பிஷிங் தாக்குதல்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்” என்றார்.

புதிய ஃபேஸ்-லாக் இன் வசதி சுமார் 10,000 தனித்தனி முகங்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் முடிவு கிட்டத்தட்ட 100 சதவீத துல்லியத் தன்மையைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facial-Recognition
Facial-Recognition

Paytm Face Lock தொழில்நுட்ப தகவல்:

ஃபேஸ்-லாக் என்பது தனி மனிதரின் முக அமைப்புகளை கணித முறையில் கணக்கிட்டு அதன் தரவுகளில் சேமித்து வைத்து கொண்டு ஒவ்வொரு முறையும் புதியதாக திறக்கும் பொது ஏற்கனவே சேமித்துள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கும் நிலையில் திறக்குமாறு பயோ மெட்ரிக் வகையில் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் மூலமாக வேலை செய்யும் தொழில் நுட்பமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here