தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம்

0
114
O Panneerselvam Speaks About Karunanidhi in Mourning Resolution-New4 Tamil Online Tamil News Website
O Panneerselvam Speaks About Karunanidhi in Mourning Resolution-New4 Tamil Online Tamil News Website

தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி மறைவிற்காக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டதையடுத்து, கருணாநிதி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றினார். 

பல எதிர்பார்ப்புகளுடன் ஆளுநர் உரையுடன் ஆரம்பித்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய கூட்டத்தொடரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.அதையடுத்து இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மறைந்த தலைவர்கள் மீது இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழக சட்டசபையில் மறைந்த திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி மீது கொண்டுவரப்பட்ட இரங்கல்  தீர்மானத்தின் மீது துணை முதல்வர் ஓபிஎஸ் கருணாநிதி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.இது குறித்து அவர் சட்டசபையில் உரையாற்றியதாவது மனஉறுதி கொண்டவர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர், அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கருணாநிதி எனவும்,தொடர்ந்து 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர். கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 

சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர். சமூக நீதிக்காக போராடியவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கருணாநிதி மீது அளவற்ற பற்று கொண்டவர். ஒரு நிமிடத்தில் சட்டசபையை கலகலப்பாக ஆக்க கூடியவர். பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என முரசொலியில் கருணாநிதி கூறியது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது” என்றும் ஓபிஎஸ் கருணாநிதி குறித்து  புகழ்ந்து பேசினார். 

இதனையடுத்து  மறைந்த அதிமுக எம்.எல்.ஏ வான ஏ.கே.போஸ் மீதான இரங்கல் தீர்மானத்தில் அவர் குறித்து பேசியதாவது, ‘தொகுதி பிரச்சனைகள் தீரும் வரை ஓயாமல் உழைத்தவர் ஏ.கே.போஸ்’ என்று ஓபிஎஸ் புகழ்ந்து பேசியுள்ளார். 

அரசியலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தாலும் திமுக தலைவரை அதிமுக வை சேர்ந்த ஓபிஎஸ் புகழ்ந்து பேசியுள்ளது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here