தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என நிதின் கட்கரி விளக்கம்

0
140
Nitin Gadkari Says no Permission for Mekedatu Dam without Consent of TN Govt-News4 Tamil Online Tamil News Website
Nitin Gadkari Says no Permission for Mekedatu Dam without Consent of TN Govt-News4 Tamil Online Tamil News Website

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என நிதின் கட்கரி விளக்கம்

இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் திமுக வின் எம்.பி.கனிமொழி ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.அதில் மேகதாது அணை பிரச்சனையில் நாடாளமன்றத்தை முடக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதியதாக அனைக்கட்டுவதற்கு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வள ஆணையம் தற்போது விரிவான அறிக்கை தயாரிப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தை சேர்ந்த MP க்கள் முழக்கமிட்டனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலையின் முன்பாக இதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.இதனால் அவை நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கியது.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் மேகதாது பிரச்சனையில் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.மேலும் இது குறித்து எம்.பி க்கள் தம்மிடம் நேரில் வந்து விளக்கம் பெறலாம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.எனவே தமிழக MP க்கள் இந்த பிரச்சனையால் நாடாளுமன்றத்தை முடக்குவதை கைவிட வேண்டும் நிதின் கட்கரி கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Nitin Gadkari Says no Permission for Mekedatu Dam without Consent of TN Govt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here