ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை

0
85
National Green Tribunal’s Report on Sterlite Issue-News4 Tamil Online Tamil News Website
National Green Tribunal’s Report on Sterlite Issue-News4 Tamil Online Tamil News Website

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை

தூத்துக்குடியில் பொது மக்களின் உடல்நலத்திற்கு கேடாக நடந்து வந்த  ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிய உத்தரவு தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நலனிற்கு எதிராக தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்களின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 நபர்கள் கொல்லப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து இந்த துப்பாக்கி சூடு விவகாரத்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பிரச்சனை தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் உணர்வுகளுக்கும், போராட்டத்திற்கும் மதிப்பளிப்பதாக கூறி, கடந்த மே மாதம் 28ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரபட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் மக்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய ஆய்வு நடத்தினார். இவ்வாறு நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வின் அறிக்கையை மூன்று தினங்களுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த குழு தாக்கல் செய்தது.

தனித்தனியாக சீலிடப்பட்ட 48 கவர்களில் அளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் நிலத்தடி நீர், காற்று மாசு, சுற்றுப்புறச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததற்கான தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தருண் அகர்வால் குழு வழங்கிய இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக உள்ளது தெரியவந்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை-News4 Tamil
National Green Tribunal’s Report on Sterlite Issue

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்

  • ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது தவறு
  • ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உரிய காரணம் இல்லை
  • ஸ்டெர்லைட் ஆலையிடம் மூடுவதை குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்கவில்லை
  • ஸ்டெர்லைட் ஆலையின் நியாயத்தை கேட்காமல் தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது
  • நிலத்தடி நீர், காற்று மாசுபாடு ஆகியவற்றை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்யலாம்

இவ்வாறு தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை பரிசீலித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த அறிக்கை பற்றி 1 வாரத்திற்குள் தமிழக அரசு தகுந்த விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

National Green Tribunal’s Report on Sterlite Issue

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here