துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களை பலி வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

0
149
National Green Tribunal Gives Permission to Reopen Sterlite Plant-News4 Tamil Online Tamil News Website
National Green Tribunal Gives Permission to Reopen Sterlite Plant-News4 Tamil Online Tamil News Website

துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களை பலி  வாங்கியஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம்அனுமதி

தூத்துக்குடியில் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 நபர்கள் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக குழு அமைக்கப்பட்டது.அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆலையையும் அதன் சுற்று பகுதிகளையும்  ஆய்வு செய்த இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து மேலும் படிக்க கீழுள்ள தொடர்பில் செல்லுங்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை ஆணையத்தின்அறிக்கை

இந்நிலையில் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து வாதங்களும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இதை பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.இத்துடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களை கண்காணிப்பதற்கென்று தனி குழு அமைக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

National Green Tribunal’s Report on Sterlite Issue-News4 Tamil Online Tamil News Website
National Green Tribunal’s Report on Sterlite Issue-News4 Tamil Online Tamil News Website

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய இந்த தீர்ப்பில் அடுத்த வரும் 3 ஆண்டுகளில், ஸ்டெர்லைட் நிறுவனம், தூத்துக்குடியில் நலத் திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். தண்ணீர் சப்ளை, மருத்துவமனை, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ச்சித் திட்டங்களில் இந்த முதலீடு இருக்கலாம்’ என்று கூறியுள்ளது.

இந்த உத்தரவு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட தமிழக அரசிற்கும் அதற்காக போராடிய மக்களுக்கும் பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#SterliteProtest #NGT #Sterlite

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here