டிசம்பர் 23: தேசிய விவசாயிகள் தினம்

0
143
National Farmers day-News4 Tamil Online Tamil News Website
National Farmers day-News4 Tamil Online Tamil News Website

டிசம்பர் 23: தேசிய விவசாயிகள் தினம்

இந்தியாவின் முதுகெலும்பாக போற்றபடுவது விவசாயமாகும். நம் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் இந்திய பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த தினமான டிசம்பர் 23 தேதி ஆன இன்று தேசிய விவசாயிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

இந்தியாவில் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப விவசாயத்தில் பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று தினம் தினம் மாற்றங்கள் நடந்து கொண்டே தான் வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பசுமை புரட்சியின் பாதிப்புகள் விவசாய மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகளின் தொடர் கடின உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இப்படி விவசாயத்தில் பல்வேறு சாதனைகள் நடைபெற்று  கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயிகள் பெரும்பாலான இடங்களில்  பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் கடன் தொல்லையாலும், சரியான வருமானம் இல்லாததாலும் கிடைக்காததாலும் விவசாயத்தை கைவிட மனமின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த ஒவ்வொரு வருடமும் முன்னாள் இந்திய பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதியை ‘தேசிய விவசாயிகள் தினமாக’ அனுசரித்து விவசாயிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல பிரதமர்கள் இருந்திருந்தாலும், குறிப்பாக சரண் சிங்கின் பிறந்த நாளை மட்டும் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூரில் சாதாரண  விவசாய குடும்பத்தில் சரண் சிங் பிறந்தார், எளிமையாக இவர் விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தார். இவர் வேளாண்துறை மற்றும் வனத்துறை மந்திரியாக உத்தரப்பிரதேச அரசில் பதவி வகித்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது முக்கிய பங்காற்றினார். இச்சட்டத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முறைக்கு வழிவகை செய்துள்ளார். இந்தியாவில் பல நாட்களாக பிரச்சனையாக தொடர்ந்து வந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கிடையே 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் சவுத்ரி சரண் சிங் இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதே சமயம் சரண் சிங் நில உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வந்தார். அவருடைய ஆட்சியின் போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதுவே அவருடைய ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

‘ஜமீன்தாரி முறை ஒழிப்பு’, ‘கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவசாயிகள் வாழ்க்கை சம்பந்தமாகவும் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

தன் வாழ்நாளில் பெரும்பாலும் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக,  சரண் சிங் அவர்களின்  பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முதுகெலும்பாகவும்,சதவீத மக்களின் பெரும்பான்மையான தொழிலாக விவசாயம் இருந்து வந்தாலும் நாட்டை ஆண்டுவருபவர்களுக்கு இன்னும் விவசாயம் முக்கியத்துவமானதாக தெரியவில்லை.தொடர்ந்துவளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நன்றாக விளைச்சலை கொடுக்கும் விவசாய நிலங்களைஅழித்து கொண்டு வருகின்றனர்.இனியாவது விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துநாட்டில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட அரசுவழிவகை செய்யுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here